டெல்லி: சென்னையைச் சேர்ந்த பொலாரிஸ் கன்சல்டிங் மற்றும் சர்வீசஸ் நிறுவனத்தில் 53 சதவீத பங்குகளை அமெரிக்காவைச் சேர்ந்த வெர்சூஸா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இத்திட்ட ஒப்பந்தத்திற்கான மொத்த மதிப்பு சுமார் 1,173 கோடி ரூபாய் எனப் போலாரிஸ் நிறுவனம் தெரிவித்தது.

இதன் மூலம் வெர்சூஸா, போலாரிஸ் நிறுவனத்தின் அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த தொழில்நுட்ப சேவையில் இவ்விரு நிறுவனங்களின் கூட்டணி மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க உள்ளது.
மேலும் இத்துறையில் இருக்கும் சிறிய நிறுவனங்களுக்கும் முன்னணி நிறுவனங்களும் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பு உண்டாகும்.
வெர்சூஸா நிறுவனம், போலாரிஸ் நிறுவன நிறுவன தலைவர் அரூண் ஜெயின் மற்றும் முக்கியப் பங்குதாரர்களான ஆர்பிட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்றியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் செபி கட்டுப்பாடுகளின் படி 26 சதவீத பங்குகள் பொதுச் சந்தையில் இருக்க வேண்டும் என்பதால் பொலாரீஸ் நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் சுமார் 100 மில்லியன் டாலர் நிதியை ஈட்டவும் வெர்சூஸா முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications