டெல்லி: அமெரிக்காவின் முன்னணி ஏவியேஷன் நிறுவனமான போயிங், டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஏஹெச்-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கப் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
சமீபத்தில் இந்திய பாதுகாப்புத் துறை 37 ஹெலிகாப்டர்களைப் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது. இதனை முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப் போயிங் மற்றும் டாடா கூட்டணி முடிவு செய்துள்ளது.
கூட்டணி
இப்புதிய கூட்டணி முதலில் இந்தியாவில் ஏஹெச்-64 ரக அப்பாச்சி ஹெலிகாப்டர் உற்பத்திக்கான தளத்தை அமைத்து, இதன் பின் தொடர் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் போயிங் நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது.
போயிங்
டாடா நிறுவனத்துடனான இந்தக் கூட்டணி இந்தியாவில் புதிய வாய்ப்புகளையும், வளர்ச்சிக்கான ஆதாயங்கள் மட்டும் அல்லாமல் பாதுகாப்புத் துறை சார்ந்த விற்பனையிலும் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது எனப் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா
இந்தியா விமானப் படையை வலிமைப்படுத்த மத்திய பாதுகாப்புத் துறை 22 ஏஹெச்-64ஈ அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர் மற்றும் 15 சிஹெச்-47எப் சினூக்கி ஹெவி-லிப்ட் ஹெலிகாப்டர்களை ஆர்டர் செய்தது. இரண்டும் போயிங் நிறுவனத்தின் புதிய மற்றும் அதிநவீன ஹெலிகாப்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேக் இன் இந்தியா
இப்புதிய கூட்டணி நிறுவனம் இந்தியாவில் ராணுவ விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டும் அல்லாமல் பயணிகள் விமானங்களையும் இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் ஏவியேஷன் துறை மற்றும் அதன் சார்ந்த பொருட்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்ட உள்ளது.
டாடா குழுமம்
மேலும் டாடா நிறுவனத்தின் கிளை நிறுவனங்களான டாடா அட்வான்ஸ் மெட்டிரியல்ஸ் நீர்மூழ்கி கப்பலுக்கான உதிரி பாகங்களை மற்றும் உலோகங்களை அளிக்கிறது. அதேபோல் டால் உற்பத்தி நிறுவனம் போயிங் நிறுவனத்திற்கான உலோகங்களை அளிக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications