இந்தியாவில் வாகன விற்பனை அமோகம்.. அக்டோபர் மாதத்தில் 13.91% உயர்வு..!

டெல்லி: விழாக்காலம், தள்ளுபடி எனப் பல்வேறு காரணங்களுக்காக அக்டோபர் மாதத்தில் இந்திய சந்தையில் கார் விற்பனை 21.80 சதவீதம் அதிகரித்து 1,94,158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 1,59,408 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இக்காலகட்டத்தில் கார் மட்டும் அல்லாமல் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் வாகன விற்பனை அமோகம்.. அக்டோபர் மாதத்தில் 13.91% உயர்வு..!

அக்டோபர் மாதத்தில் உள்நாட்டுச் சந்தையில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 5.66 சதவீதம் அதிகரித்து 10,65,856 ஆக உயர்ந்துள்ளது என் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மொத்தை விற்பனை அளவு ( அதாவது ஏற்றுமதியுடன்) அக்டோபர் மாதத்தில் 13.31 சதவீதம் உயர்ந்து 16,56,235 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வணிக வாகனங்களின் விற்பனை எண்ணிக்கையும் 12.73 சதவீதம் அதிகரித்து 58,596 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அக்டோபர் மாதத்தில் மொத்த வாகன விற்பனையின் எண்ணிக்கை 13.91 சதவீதம் உயர்ந்து 20,35,821 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+