துட்டு போதாது.. ஐஐடி கேம்பஸ் இண்டர்வியூவில் தடை செய்யப்பட்ட சோமேட்டோ..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: இந்திய நாட்டின் சிறந்த கல்லூரிகளாகக் கருதப்படும் ஐஐடிகளில் இருந்து மாணவர்களைப் பணியில் அமர்த்த நிறுவனங்கள் போட்டி போடுவது இயல்புதான்.

ஆனால் இந்த வருடம் ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமான சோமேடோ ஐஐடி கல்லூரி பிளேஸ்மென்ட்ல் கலந்துகொள்ளத் தடை விதிக்க அனைத்து ஐஐடி கவுன்சில் முடிவு செய்யள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

6 ஐஐடி கல்லூரிகள்

6 ஐஐடி கல்லூரிகள்

குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்தபடி டெல்லி, மும்பை, காரக்பூர், சென்னை, கான்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய 6 ஐஐடி கல்லூரிகள் சோமேட்டோ நிறுவனத்தைத் தடை செய்துள்ளதாக நம்பத்தகுந்த செய்தி கிடைத்துள்ளது.

என்ன பிரச்சனை..

என்ன பிரச்சனை..

1 பில்லியன் டாலர் மதிப்புள்ள சோமேட்டோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் டெல்லி ஐஐடி கல்லூரியின் முதல் நாள் இண்டர்வியூ ஸ்லாட்டில் சில பிரச்சனைகளைச் சந்தித்தது.

இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவன நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 26 லட்சம் என்ற குறைவான சம்பளத்தை அளிப்பதால் டெல்லி ஐஐடி கல்லூரியின் முதல் இண்டர்வியூவில் கலந்துகொள்ள முடியவில்லை.

 

டிவிட்டர்

டிவிட்டர்

இதுகுறித்துச் சோமேட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபின்தர் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் ஐஐடி கல்லூரிகளின் பிளேஸ்மென்ட் முறைகளைக் குறித்து நேரடியாகக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஐஐடி காரக்பூர்

ஐஐடி காரக்பூர்

இதுகுறித்து ஐஐடி காரக்பூர் மாணவர் அமைப்பின் தலைவர் அடல் கூறுகையில்,

ஐஐடி கவுன்சில் அமைப்பின் படி, கவுன்சிலின் விதிமுறைகள் மற்றும் தகுதியை ஈடுசெய்ய முடியாக ஒரு நிறுவனம் எந்த ஒரு ஐஐடி கல்லூரியின் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொள்ள முடியாது. மேலும் இந்நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்படும் என அவர் கூறினார்.

 

பணியாளர்கள் வெளியேற்றம்

பணியாளர்கள் வெளியேற்றம்

சமீபத்தில் தான் சோமேட்டோ நிறுவனம் தனது 3000 பணியாளர்கள் எண்ணிக்கையில் 10 சதவீத ஊழியர்களை நிறுவனத்தை விட்டு வெளியேற்றியது.

ஸ்டாட் அப்

ஸ்டாட் அப்

மேலும் இன்றைய நிலையில் சில முக்கிய ஸ்டாட்அப் நிறுவனங்களுக்கு ஐஐடி கல்லூரிகளில் இண்டர்வியூ செய்ய இடம் கிடைத்தாலும், பல பேருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என ஐஐடி பாம்பே கல்லூரியின் முன்னாள் பிளேஸ்மென்ட் அதிகாரி தெரிவித்தார்.

டிராக்ட்ஐ

டிராக்ட்ஐ

கடந்த வருடம் இதேபோன்ற பிரச்சனைகளில் டிராக்ட்ஐ சந்தித்த ஒரு வருடமாகத் தடை செய்யப்பட்டுது. 2015ஆம் ஆண்டில் முக்கிய மாற்றங்களின் மூலம் டிராக்ட்ஐ (Directi) ஐஐடி கல்லூரிகளின் கேம்பஸ் இண்டர்வியூவில் கலந்துகொள்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Restaurant guide Zomato goes off placements menu at IITs

Zomato has been blacklisted and barred from the Indian Institutes of Technology (IIT) placements this year. A decision to this effect was taken recently by the All-IITs Placement Committee (AIPC).
Story first published: Wednesday, November 11, 2015, 12:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X