ஜி20 நாடுகளின் புதிய கட்டுப்பாடுகள்.. அதிர்ந்தது சீன வங்கிகள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹாங்காங்: புதிய வங்கி மூலதன கொள்கையின் மூலம் சீன வங்கித்துறை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சி சரிவை சந்திக்க உள்ளது.

 

தற்போது உள்ள உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகளில் வங்கிகள் முடங்கினால் ஒரு நாட்டின் பொருளாதாரமே சீரழிந்துவிடும் நிலையில் உள்ளது. வங்கி முலதன கொள்கையை மாற்றியமைப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலை பெற்றும் இதுவே இப்பிரச்சனைக்குச் சிறந்த தீர்வாக அமையும் என ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடி

2008ஆம் ஆண்டுப் பொருளாதார நெருக்கடி

கடந்த 2008ஆம் ஆண்டு நாம் சந்தித்த உலகளவில் பொருளாதார நெருக்கடியில் லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலானது முதல், சுமார் 1.5 டிரில்லியன் டாலர் அளவிலான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்தோம்.

இத்தகைய நிலையைக் கருத்தில் கொண்டு ஜி20 நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

 

ஜி20 நாடுகள்

ஜி20 நாடுகள்

இந்நிலை மீண்டும் உருவாகாமல் இருக்க ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் பைனான்சியல் ஸ்டேபிலிட்டி போர்ட் (FSB) புதிய வங்கி மூலதன கொள்கையை வடிவமைத்துள்ளது. இப்புதிய கொள்கையின் மூலம் உலக வங்கிகள் "too big to fail" பிரச்சனையை எளிதாகச் சமாளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

சீன வங்கிகள்
 

சீன வங்கிகள்

இப்புதிய கொள்கையின் மூலம் சீன வங்கிகள் அதிகளவில் பாதிக்க உள்ளது. சர்வதேச வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட இந்தப் புதிய கட்டுப்பாடுகளில் உலகளவில் விரிவாக்கம் அடைந்த சில சீன வங்கிகளும் அடங்கியுள்ளது.

400 பில்லியின் டாலர்

400 பில்லியின் டாலர்

பாங்க ஆஃப் சீனா, சீன விவசாய வங்கி, சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கி மற்றும் சீன கட்டுமான வங்கி ஆகியவை GSIB பட்டியலில் இடம்பெற்றுள்ள சீன வங்கிகளாகும்.

புதிய கொள்கைகளின் படி இந்த 4 வங்கிகளும் சுமார் 350 முதல் 400 பில்லியன் டாலர் வரை நிதிதிரட்ட வேண்டும். இந்த நிதி திரட்டும் பணியைச் சீன வங்கிகள் பொருளாதார வளர்ச்சி காரணமாக 2020ஆம் ஆண்டுக்குப் பின் செய்வதாகத் தெரிவித்துள்ளது.

 

சீனா வங்கி அமைப்பு

சீனா வங்கி அமைப்பு

இதன் மூலம் அடுத்தச் சில வங்களுக்கு இந்த நான்கு வங்கிகளும் தனது கடன் அளவுகளைக் குறைத்தும், வங்கி வைப்பில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்றும் நிதி திரட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதனால் சீன நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் தொய்வு ஏற்படும்.

 

பொருளாதார நெருக்கடி..

பொருளாதார நெருக்கடி..

ஏற்கனவே உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைவினால் அதிகளவில் பாதித்து வரும் சீனாவிற்கு வங்கித்துறையில் அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடு புதிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

30 வங்கிகள்

30 வங்கிகள்

ஜி20 நாடுகளின் புதிய வங்கி மூலதன கொள்கையை ஈடு செய்யாதா 30 வங்களை FSB பட்டியலிட்டு கவனித்து வருகிறது. இவ்வங்கிகளை GSIB என அழைக்கப்படுகிறது.

நாட்டின் மக்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்க இந்த 30 வங்கிகளும் கூடுதலாக நிதி திரட்ட வேண்டும் என்பதே GSIB பட்டியலின் நோக்கம்.

 

 

ஜி20 நாடுகள் கூட்டமைப்பு..

ஜி20 நாடுகள் கூட்டமைப்பு..

ஜி20 கூட்டமைப்பின் கீழ் அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய ராஜ்யம் (UK) மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

'Too big to fail' Chinese banks face $400 billion capital call

China's four biggest banks may have to raise up to $400 billion to meet new global capital rules, an onerous task that could pressure them to slow down lending at a time when Beijing wants them to help prop up economic growth.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X