டோக்கியோ: ஆஸ்திரேலியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகளவில் குறைந்ததை அடுத்து ஆசிய சந்தையில் அனைத்து நாணய மதிப்புகள் சரிந்தது. குறிப்பாக வர்த்தக உலகை ஆளும் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகளவிலான சரிவை சந்தித்துப் பிற நாட்டு நாணயங்களின் மதிப்பையும் குறைத்து வருகிறது.
பொதுவாக அமெரிக்கா பொருளாதாரம் மற்றும் டாலர் மதிப்பைக் கொண்டே உலக நாடுகளின் நாணய மதிப்புகள் நடனம் ஆடும்.
ஆனால் தற்போது அமெரிக்கச் சந்தையில் நிலவும் குறைவான பணவீக்கத்தின் காரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் என்னும் குடுமி உலக நாடுகளின் கையில் உள்ளதாக ஒரு மாயை உருவாகியுள்ளது. இந்த நிலை எப்போதும் வேண்டுமானாலும் மாறாலம்.
நாணய மதிப்பு மற்றும் பரிமாற்றங்கள் குறித்த இன்றைய நிலவரம்..!
யுவான் மதிப்புச் சரிவு..
அதுமட்டும் அல்லாமல் ஐஎம்எப் முடிவுகள் மற்றும் ஆமெரிக்க டாலர் பரிமாற்ற வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சனையின் காரணமாகச் சீனா யுவான் மதிப்பும் தொடர்ந்து 8வது நாளாக இன்று சரிந்துள்ளது.
ஆஸ்திரேலியா
அக்டோபர் மாதத்திற்கான ஜாப்ஸ் டேட்டா அறிக்கையை ஆஸ்திரேலியா அரசு திங்கட்கிழமை வெளியிட்டது.
இதில் வேலையில்லாதோர் எண்ணிக்கை, கணிப்புகளுக்கும் குறைவான அளவான 5.9 சதவீதம் பதிவு செய்து வலுவான நிலையை அடைந்தது ஆஸ்திரேலியா அரசு.
அமெரிக்கப் பெடரல் வங்கி
பெடரல் வங்கியின் தலைவர் ஜெனெட் கூறுகையில், முதலீட்டாளர்கள், அதிக லாபம், குறைவான ஆபத்து உடையச் சந்தையில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது உள்ள பொருளாதாரச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் குறுகிய கால முதலீட்டாளராக மாறியுள்ளது தனக்கு வருத்தமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
முதலீடு குவியும்..
வர்த்தக உலகின் கிங்மேக்கரான அமெரிக்கா டாலரின் மதிப்பு சரிய துவங்கியதால் முதலீட்டாளர்கள் லாபகரமான சந்தையை நோக்கிய செல்ல துவங்கியுள்ளனர். குறிப்பாக இதில் ஆஸ்திரேலியா, இந்தியா இடம்பெற்றுள்ளது.
டிசம்பர்
மேலும் ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற பெரும் பொருளாதார நாடுகள் உள்நாட்டுப் பிரச்சனை மற்றும் மந்தமான பொருளாதாரச் சூழலில் தவித்தும் நிலையில் அமெரிக்கா பெடரல் வங்கி டிசம்பர் மாதம் தனது வட்டி விகித உயர்வை அறிவிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனால் ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகள் மட்டும் அல்லாமல் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியாவும் அதிகளவில் பாதிக்கப்படும்.
சீனா
சர்வதேச நாணய நிதியத்தின் SDR basket இல் சீனா யுவான் நாணயத்தைச் சேர்க்கும் முடிவுகளை அடுத்தச் சில நாட்களில் ஐஎம்எப் முடிவு செய்ய உள்ளது.
மேலும் அமெரிக்கா டாலர் மற்றும் யுவான் நாணயங்கள் மத்தியிலான சமநிலை விகிதம் அதிகளவில் குறைந்துள்ளதால் சர்வதேச நாணய சந்தையில் யுவான் மதிப்பு 14 புள்ளிகள் குறைந்துள்ளது.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications