லண்டன்: இந்தியாவில் தனது மொபைல் சேவையை மேம்படுத்துவதற்காகவும், புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்காகவும் வோடபோன் நிறுவனம், இந்திய சந்தையில் 1.3 பில்லியன் டாலர் அதாவது 13,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் வோடாபோனின் சக போட்டி நிறுவனமான ஏர்டெல் கவலையில் மூழ்கியுள்ளது.
நாட்டில் சிறந்த மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்கும் டாப் 10 நிறுவனங்களில் 2வது இடத்தில் இருக்கும் இந்தப் பிரட்டன் நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்க அதிகளவிலான முதலீட்டுத் திட்டத்துடன் இந்தியா வருகிறது.
என்ன செய்யப் போகிறது வோடபோன்..?
வோடபோன் நிறுவனத்தின் இந்த 13,000 கோடி ரூபாய் முதலீட்டில் 8,000 கோடி ரூபாயில் நிறுவன நெட்வொர்கை விரிவாக்கம் செய்யவும், மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
3,000 கோடி ரூபாய் தொகையில் இந்நிறுவனத்தின் டெக்னாலஜி சென்டர், ஐடி மற்றும் வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்த உள்ளது. ரூ.1,000 கோடியில் 4ஆம் தர டேட்டா சென்டரை அமைக்க உள்ளது.
மீதமுள்ள 1,000 கோடி ரூபாயில் இந்நிறுவனத்தின் பேமென்ட் வங்கி சேவையான எம்-பைசாவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மோடி சந்திப்பு
லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடியிடம் வோடபோன் நிறுவனத்தின் சீஇஓ விட்டோரியோ கோலோ இந்தியாவில் செய்ய உள்ள 13,000 கோடி ரூபாய் முதலீடு குறித்தும், தங்களது திட்டங்கள் குறித்தும் விவரித்தார்.
2007 முதல்..
இந்தியாவில் வோடபோன் 2007ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிலையில், இதுவரை சுமார் 1.11 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகளவில் அன்னிய முதலீடு செய்த டாப் 10 நிறுவனங்களின் வோடபோன் இடம்பிடித்துள்ளது.
வோடபோன்
இந்நிறுவனம் பிரட்டன், இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் இயங்கி வருகிறது. ஆயினும் இந்திய சந்தையை மிகவும் முக்கியமானதாக வோடபோன் கூறுகிறது.
வேலைவாய்ப்புகள்
1.3 பில்லியன் டாலர் முதலீட்டில் இந்தியாவில் செய்யப்படும் விரிவாக்கப் பணிகளின் மூலம் சுமார் 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என வோடபோன் தெரிவித்துள்ளது.
ஏர்டெல்
இந்திய சந்தையைப் பொருத்த வரை ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் அதிகம் இதனால் இந்நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆயினும் வோடபோன், டாடா டோக்கோமோ போன்ற நிறுவனங்கள் கடுமையான போட்டி அளித்து வருகிறது.
அடுத்த 5 வருடத்தில் இந்திய டெலிகாம் துறையில் மிகப்பெரிய போட்டி உருவாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications