மும்பை: நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ, ஐபிஓவில் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமான பங்குச்சந்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை பட்டியலிடப்பட்ட இண்டிகோவிற்குப் புதன் மற்றும் வியாழக்கிழமை பங்குச்சந்தை விடுமுறையாக அமைந்தது. இது இண்டிகோ நிறுவனத்திற்குச் சோகமான விஷயமாக இருந்தாலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 2 நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 20% வரை உயர்ந்து அசத்தியுள்ளது.

முதல் நாள் வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்வடைந்து 10% உயர்வில் வர்த்தகம் முடிவடைந்தது.
ஒரு பங்கின் விலை 765 ரூபாய் என்ற வெளியிடப்பட்ட இண்டிகோ நிறுவனப் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 8.6% உயர்வுடன் 1,003 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

முதல் நாள் வர்த்தகத்தில் 50.66 லட்சம் பங்கு பரிவர்த்தனை நடந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,655 கோடி ரூபாயாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஐபிஓ மூலம் இண்டிகோ நிறுவனம் சுமார் 1,272 கோடி ரூபாய் வரை நிதி திரட்டியது. கடந்த மூன்று வருடங்களில் வெளியான மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications