டெல்லி: சர்வதேச பொருளாதாரச் சூழல்நிலை மற்றும் வர்த்தகப் பாதிப்புகளால் இந்திய சந்தையில் கடந்த 11 மாதங்களாக ஏற்றுமதி இறக்குமதி அளவுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மத்திய அரசு இன்று வெளியிட்ட தகவல்கள் படி அக்டோபர் மாதத்தில் மொத்த ஏற்றுமதி பொருட்களின் மதிப்பு அளவு சுமார் 17.5 சதவீதம் குறைந்து 21.35 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
அதேபோல் இறக்குமதியிலும் 21.15 சதவீத சரிவுடன் 31.1 பில்லியன் டாலராக உள்ளது.
இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவுகள் 13.57 பில்லியன் டாலரில் இருந்து 9.76 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 13.57 பில்லியன் டாலராக இருந்தது.

எண்ணெய் இறக்குமதி
அக்டோபர் மாத காலகட்டத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியின் மதிப்பு 45.3 சதவீத குறைந்து 6.8 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் தங்கத்தின் இறக்குமதியின் அளவுகள் 59.5 சதவீதம் அதிகரித்து 1.7 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் 30 பொருட்களின் இறக்குமதி பட்டியலில் வெறும் 10 பொருட்களின் மதிப்பு மட்டுமே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications