மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான மைக்ரோமாக்ஸ்-இல் இருந்து உயர் அதிகாரிகள் கொத்துக் கொத்தாக வெளியேறி வருகின்றனர்.
இந்நிறுவனத்தின் நிறுவனர்களுடன் நடந்த பிரச்சனையின் காரணமாகச் சில வாரங்களுக்கு முன் மைக்ரோமாக்ஸ் நிறுவன தலைவராகப் பணியாற்றிய சஞ்சய் கபூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து 5 அதிகாரிகள் தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர். இதனால் இந்நிறுவன செயல்பாடே தற்போது மிகப்பெரிய கேள்வி குறியாக மாறியுள்ளது.
மெபைல் உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமான திகழும் மைக்ரோமாக்ஸ் நிறுவனம், இந்தியாவில் மட்டும் அல்லாமல் ரஷ்யா, பங்களாதேஷ், நேபால், இலங்கை ஆகிய நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தி, தயாரிப்பு, வடிவமைப்பு போன்ற அனைத்துப் பணிகளும் இந்திய சந்தையில் மட்டுமே செய்யப்படுகிறது. மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் 4 நிறுவனர்களுடன் நடந்த கருந்து வேறுபாடுகள் காரணமாக இந்நிறுவன வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த சஞ்சய் கபூர் அவர்களைப் போலியான பெட்ரோல் பில்களை அளித்தாகக் காரணம் காட்டி நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். சஞ்சய் கபூர் அவர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து பெங்ளூரில் இருக்கும் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் தலைவர் தேஜ் குடேனா, விற்பனை பிரிவின் உயர் அதிகாரிகளான ப்ரோசென்ஜித் சென் மற்றும் காஜா முசாரபுல்லா ஆகியோர் ராஜினாமாவை அறிவித்தனர். இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான பிரவீன் சுபா, தலைமை நிதியியல் அதிகாரி படல் பஜாரி ஆகியோர் கூடிய விரைவில் தங்களது ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் நிறுவன உயர் அதிகாரிகளின் வெளியேற்றம் குறித்து நன்கு அறிந்த ஒருவர், மைக்ரோமாக்ஸ் நிறுவன சீஇஓ அவர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறத் தயாராக உள்ளார் எனக் கூறினார். மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் சிறு அளவிலான பங்குகளில் அலிபாபா நிறுவனம் முதலீடு செய்வதன் மூலம் சீன சந்தையிலும் அலிபாபா-வின் உலகளாவிய ஆன்லைன் விற்பனையில் இணைந்துகொள்ள அலிபாபா உடன் சஞ்சய் கபூர் தலைமையில் குழு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. சஞ்சய் கபூர் வெளியேற்றத்தின் மூலம் இப்பேச்சுவார்த்தை தற்காலிகமாகவோ அல்லது முழுமையாக முடங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் புதிய சந்தை வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றிய இந்நிறுவனத்தின் சீஇஓ வினித் தனேஜா அவர்களும் கூடிய விரைவில் தனது ராஜினாமாவை அறிவிக்க உள்ளார் என்பது மைக்ரோமாக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி. சஞ்சய் கபூர் ஏர்டெல் நிறுவனத்தில் பணியாற்றிய போது தனது குழுவில் வினித் தனேஜா முக்கியப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தில் சஞ்சய் கபூர் நியமிக்கப்பட்ட பின் தான் வினித் இந்நிறுவனத்துடன் இணைந்தார். சர்வதேச மொபைல் விற்பனை சந்தையில் அதிகளவில் விற்கப்படும் மொபைல் போன்களில் டாப் 10 இடத்திற்குள் இருக்கும் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தில் இத்தகைய பிளவு நிறுவன வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் மோசமான நிலையை உணர்ந்த மைக்ரோமாக்ஸ் நிர்வாகிகள், மீண்டும் நிறுவனத்தில் இணையச் சஞ்சய் கபூர் அவர்களிடம் மிகப்பெரிய அளவிலான டீல் செய்து வருகின்றனர்.
மைக்ரோமாக்ஸ்
சஞ்சய் கபூர்
பிற அதிகாரிகள்
இப்பட்டியலில் தற்போது சீஇஓ..
அலிபாபா உடன் கூட்டு..
வினித் தனேஜா
மொபைல் விற்பனை
டீல்
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications