டெல்லி: நாட்டின் முன்னணி மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து சேவை அளிப்பதில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்நிறுவம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகள் அனைத்தும் சன் டிவி நெட்வொர் தலைவர் கலாநிதிமாறனிடம் இருந்து அஜய் சிங் கைமாறிய பிறகு இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் நிதிநிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
இந்நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் செய்யும் செயலை நீங்களே பாருங்கள்.
விமானப் பயணிகள்
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விமானப் பயணிகள் எண்ணிக்கையின் காரணமாக, இந்திய விமான நிறுவனங்கள் தங்களது திறமைக்கு ஏற்றவாறு விமானங்களை வாங்கி, சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.
150 எனக்கு.. 250 உனக்கு..
இந்நிலையில் கடந்த மாதம் இண்டிகோ நிறுவனம் உலகில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத அளவிற்குச் சுமார் 250 விமானங்களை ஆர்டர் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனத்திற்கு, இந்திய சந்தையில் மட்டும் அல்லாமல் சர்தேச சந்தைகளிலும் கடுமையான போட்டி அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற ஸ்பைஸ்ஜெட் தற்போது 150 விமானங்களை ஆர்டர் செய்யக் காத்துக்கிடக்கிறது.
ஸ்பைஸ்ஜெட்
இந்நிறுவனம் முடிவு செய்துள்ள 150 விமானங்களை வாங்குவதற்காக ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெரு மற்றும் மெட்ரோ நகரங்களுக்கான சேவையில் 100 பெரிய விமானங்களும், சிறு நகரங்களுக்குச் சேவை அளிக்கும் வகையில் 50 சிறு விமானங்களையும் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
அன்னிய முதலீடு
மேலும் நிறுவன வளர்ச்சிக்கான முதலீட்டைப் பெறுவதில் மத்திய அரசு அறிவித்துள்ள அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என இந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
லாபம்
அஜய் சிங் நிர்வாகத்தில் கடந்த 3 காலாண்டுகளாக இந்நிறுவனம் லாபத்தில் செயல்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலை சரிவு.
பிற நிறுவனங்கள்
சந்தையில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கும் இண்டிகோ நிறுவனம் ஏற்பஸ் நிறுவனத்திடம் சுமார் 430 விமானகங்களைப் பல பகுதிகளாக ஆர்டர் செய்துள்ளது. அதேபோல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் சுமார் 75 போயிங் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications