700 புதிய கிளைகள்.. 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு.. எஸ்பிஐ வங்கியின் புதிய திட்டம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகத் திகழும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நடப்பு நிதியாண்டில் சுமார் 7,000 ஊழியர்களை நியமிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

இவ்வங்கியின் விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய சேவையின் அறிமுகத்திற்குத் தேவையான ஊழியர்களை நியமிக்கும் பணியில் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் இறங்கியுள்ளது.

700 வங்கிக் கிளைகள்

700 வங்கிக் கிளைகள்

நடப்பு நிதியாண்டில் எஸ்பிஐ வங்கி சுமார் 700 வங்கிக் கிளைகளைத் திறக்க உள்ளது. மேலும் பல புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், இதனைக் கையாள சுமார் 2,000 பி.ஓ அதிகாரிகளையும், 5,000 கிளர்க் பணியாளர்களையும் நியமிக்க உள்ளோம் என எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜ்நீஷ் குமார் தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி

தொழில்நுட்ப வளர்ச்சி

மேலும் வங்கி அமைப்பில் இன்றளவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் வளர்ந்துள்ள நிலையில், ஊழியர்களின் தேவை கணிசமாகக் குறைந்துள்ளது எனவும் ராஜ்நீஷ் கூறினார்.

2015ஆம் நிதியாண்டு

2015ஆம் நிதியாண்டு

நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே 100 கிளைகள் திறக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 600 கிளைகளின் துவங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார்.

ஈ-வேலெட்
 

ஈ-வேலெட்

எஸ்பிஐ வங்கி சமீபத்தில் ஈ-வேலெட் என்னும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் வங்கி சேவைக்கான மொபைல் ஆப் அறிமுகப்படுத்தியது.

மேலும் அடுத்தச் சில வாரங்களில் சாதாரண மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்ட பட்டுவா என்னும் மொபைல் ஆப்பை 13 இந்திய மொழிகளில் இயங்கும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பட்டுவா என்பதற்குக் கைப்பை (Purse) எனப் பொருள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to hire 7,000; to launch e-wallet for basic phone in 13 languages

The State Bank of India (SBI) is going to hire 7,000 people this financial year to support its branch expansion plans and for the regular needs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X