1.27 கோடி ரூபாய் சம்பளம்.. கூகுள் நிறுவனத்தில் வேலை.. டெல்லி மாணவருக்கு அடித்தது ஜாக்பாட்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் முக்கியக் கல்லூரிகளில் இருந்து கேம்பஸ் இண்டர்வியூவ் மூலம் தனது நிறுவன பணியில் அமர்த்தி வருகிறது.

 

இந்த வருடமும் தனது பணியைக் கூகுள் துவங்கியது, ஆனால் இதில் சிறிய மாற்றம். கூகிள் நிறுவனம் எப்போதும் இல்லாத அளவிற்கு உலகின் பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதிகளவில் சம்பளங்களை வாரி இறைத்துள்ளது.

1.27 கோடி ரூபாய்

1.27 கோடி ரூபாய்

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சர்வதேச நிறுவன பணி நியமனத்தில் இதுவரை யாரும் பெற்றிடாத தொகை சேத்தன் காக்கர் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

ஒரு வருடத்திற்கு 1,90,000 டாலர் அதாவது 1.27 கோடி ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் இவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.

2016ஆம் ஆண்டு

2016ஆம் ஆண்டு

இந்நிலையில் சேத்தன் தனது படிப்பை 2016ஆம் ஆண்டில் முடித்துவிட்டு உடனடியாகக் கூகுள் நிறுவனத்தின் கலிபோர்னியா அலுவலகத்தில் தனது பணியில் சேர் உள்ளார்.

இதுவரை டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அதிகப்படியாக வழங்கப்பட்ட சம்பளத் தொகை 93 லட்சம் ரூபாய் மட்டுமே.

சேத்தன் காககர்

சேத்தன் காககர்

இதுகுறித்து, இதற்காகத் தான் நான் பல வருடங்களாகக் கடினமாக உழைத்தேன், தற்போது கூகுள் நிறுவனத்தில் இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனச் சேத்தன் தெரிவித்தார்.

பெற்றோர்கள்
 

பெற்றோர்கள்

சேத்தன் காக்கர் அவர்களின் பெற்றோர் இருவருமே டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். தந்தை சுபாஷ் காக்கர் மேலாண்மை கல்வியல் ஆசிரியராகவும், தாய் ரீட்டா காக்கர் வேதியல் துறை ஆசிரியராகவும் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delhi boy gets Rs 1.27 crore offer from Google

Delhi boy Chetan Kakkar has set a new record for international placement for Delhi Technological University (DTU) by grabbing an offer of $1,90,000 (Rs 1.27 crore approx) per annum from Google
Story first published: Friday, November 20, 2015, 11:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X