சென்னை: முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உங்கள் தொழிலுக்குத் தேவைப்படும் நிதிக்கான கடன் பெறுவது சுலபமாகி விட்டது. புதிய முயற்சி அல்லது நிறுவனங்களைத் தொடங்க தேவைப்படும் மூலதனம், விரிவாக்கம், புதிய கொள்முதல் போன்றவற்றுக்குப் பல வங்கிகள் வணிகக் கடன்கள் அளிக்கிறது.
எந்த ஒரு தொழிலோ அல்லது நிறுவனமோ தொடங்குவதற்கு நிதி அவசியமாகும். அதனை முழுவதுமாக நம்முடைய தனிப்பட்ட சேமிப்பில் இருந்தோ அல்லது நபர்களிடம் இருந்தோ பெற்று விட முடியாது.

அதனால் நிதிக்காக ஒருவர் தாராளமாக வங்கிகளை அணுகலாம். இருப்பினும், பெரும்பாலான வங்கிகள் புதிதாகத் தொடங்கப்படும் வணிகங்களுக்குக் கடன் அளிப்பதில்லை. மாறாக ஏற்கனவே நன்றாக இயங்கிக் கொண்டிருக்க வணிக நிறுவனங்களுக்கே கடனை அளிக்க முன் வருகிறது.
வணிகக் கடனுக்காக வங்கியையோ அல்லது இதர நிறுவனங்களையோ அணுகுவதற்கு முன்பு நீங்கள் கருத வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. தனிப்பட்ட நபர்கள் தெளிவான வணிகத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கீழ்கூறியவற்றை அடங்கிய விவரங்களைத் தயார் செய்திருக்க வேண்டும்:

1. நிறுவனத்தின் நிதி சார்ந்த கொள்கைகள்
2. வணிகத் திட்டம், ஆதரவு அளிப்பவர்களின் பின்புலம், வருவாய் மாதிரி
3. வணிகத்தின் தன்மை மற்றும் அளவு
4. வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்கள்
5.மூலதன சந்தை போக்குகள்
6. அரசாங்க கட்டுப்பாடுகள்
7. சிபில் மதிப்பெண்
திட்டத்தின் மீதும் ஆதரவு அளிப்பவர்களின் மீதும் வங்கியாளருக்கு நம்பிக்கை வரும் விதமாக அமைய வேண்டும் இந்த விரிவான திட்டம். அதே போல் உரிய நேரத்தில் நீங்கள் வட்டியைக் கட்டி விடுவீர்கள் என்ற நம்பிக்கையையும் அவர் பெற வேண்டும்.
வங்கியை அணுகுவதற்கான எளிய முறைகள்:

வழி 1:
எழுதப்பட்ட வணிகத் திட்டத்துடன் வங்கியை அணுகுங்கள். வணிகத் திட்டம் எழுதும் வல்லுநர்களையும் கூடத் தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்தலாம். உங்களது வணிகத் திட்டம், உங்களது சம்பாதிக்கும் மற்றும் வட்டியை அடைக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் தான் கடன் ஒப்புதலும் கடன் தொகையும் தீர்மானிக்கப்படும்.

வழி 2:
கடனை வழங்குவதற்கு, கடன் அளிப்பவர் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒவ்வொருவரும் வெவேறு கோட்பாடுகளைக் கொண்டிருப்பார்கள். உங்களது வணிகப் பகுதி, போட்டியாளர்கள் போன்றவற்றில் போதிய ஆராய்ச்சி செய்திடவும். சிறிய வணிகக் கடனுக்குத் தகுதி பெறுபவராக மாறும் அளவிற்குத் தயாராகிக் கொள்ளவும். பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதி திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும்.
மிகச்சிறிய, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்குக் கருத வேண்டிய சில தேவையான வழிமுறைகள் உள்ளது.
வழி 3:
அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும். பிணையம் அளித்துப் பாதுகாப்பான வணிகக் கடனை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், கடன் தொகையை ஒப்புதல் அளிப்பதை வங்கிக்குச் சுலபமாக இருக்கும். ஒரு வேளை, உங்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றால் அவர்களிடம் அதற்கு இணையான பிணையாம் உள்ளதல்லவா?

வழி 4:
சமர்ப்பித்தலின் போது, கடனையும் கடன் தொகையையும் ஒப்புதல் அளிப்பது வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களின் விருப்பத்தைப் பொருத்தத்து.
புதிய நிறுவனங்கள் அல்லது முயற்சிகள், அவர்களின் தேவைகள் மற்றும் வணிகத் தேவைகளின் பொறுத்து, டெர்ம் வகைக் கடன் அல்லது மூலதன கடன் அல்லது சொத்து அடைமான கடனை பெறலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications