சென்னை: டிசம்பர் மாத ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள இருமாத நாணய மறுஆய்வு கொள்கையில், நாட்டில் நிலவும் அதிகமான சில்லறை பணவீக்கம் மற்றும் அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி உயர்வுக்கான சாத்திக்கூறுகள் ஆகியவை ரெப்போ விகிதத்தில் எவ்விதமாற்றமும் ஏற்படுத்தாது.
இதனால் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் அக்டோபர் மாத நாணய கொள்கையை எவ்வித மாற்றமும் இல்லாமல் டிசம்பர் மாதம் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
டிசம்பர் 1
ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்ட நாணய கொள்கையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடன் அளவான ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.75 சதவீதமாக அறிவித்தது. அதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வருடத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைச் சுமார் 1.25% வரை குறைத்துள்ளது.
இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய மறுஆய்வு கொள்கையை அறிவிக்க உள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைத் தீர்மானம் செய்ய முக்கியக் காரணியாக விளங்கும் நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து 3 மாதம் உயர்வில் அக்டோபர் மாதம் 5 சதவீதமாக உயர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் உணவுப் பொருட்களின் பணவீக்கம் தான்.
இலக்கு
மேலும் ரிசர்வ் வங்கியின் இலக்கான 6 சதவீத பணவீக்கம் ஜனவரி மாதத்தில் எட்ட டிசம்பர் மாத நாணய கொள்கையில் எவ்விதமாற்றமும் அறிவிக்க வாய்ப்புகள் இல்லை.
அடுத்த வருடம் தான்..
2016ஆம் ஆண்டில் தான் ரிசர்வ் வங்கி அடுத்த வட்டி குறைப்பை அறிவிக்கும் எனச் சந்தையில் பலவேறு நிறுவனங்களைச் சார்ந்த பொருளாதார வல்லுநர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
மொத்த விலை பணவீக்கம்
நுகர்வோர் பணவீக்கம் இந்திய சந்தைக்குச் சாதகமாக இருக்கும் நிலையில் மொத்த விலை பணவீக்கம் குறைவான கச்சா எண்ணெய் விலையின் காரணமாக -3.81 சதவீதமாகப் பணவாட்ட நிலையில் உள்ளது. மேலும் கடந்த 12 மாதங்களாக மொத்தவிலை பணவீக்கம் பணவாட்ட நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications