பெங்களூரு: நவ.19ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அவர்களிடம் நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையிலான குழு 900 பக்கம் கொண்ட 7வது சம்பள கமிஷன் அறிக்கையைத் தாக்கல் செய்தது.
இதில் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் என்ற புதிய முறையை அமல்படுத்தவதன் மூலம் சுமார் 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அதிகளவில் பலன் அடைவார்கள். ஏன் சொல்லப்போனால் தற்போது பணியில் இருப்பவர்களை விடவும் அதிகளவில் பலன் அடைவது ஓய்வூதியம் பெறுபவர்கள் தான்.
மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தின் காரணமாகவே ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய தொகை அதிகரிக்க உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் படி, ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வூதிய தொகை 24 சதவீதம் அதிகரிக்க வலியுறுத்தியுள்ளது. ஆனால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு 16 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு. தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கும் கொடுப்பனவில் (allowances) 16 சதவீதம் வரை உயர்த்தச் சம்பள கமிஷன் அறிக்கை வலியுறுத்தினாலும், அரசின் நிதிநிலையில் பாதிப்புகள் ஏற்பட்டால் கொடுப்பனவை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும். இந்த நிலையைப் பார்க்கும் போது 7வது சம்பள கமிஷன் அறிக்கையின் படி அதிகப் பலனடைவது ஓய்வூதியதாரர்கள் தான். புதிய ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வு வருகிற ஜனவரி 1, 2016ஆம் ஆண்டு முதல் அமலாக்கும் செய்யப்படுகிறது. ஏற்கனவே ஓய்வூதியம் பெறுபவர்களுக்குத் தற்போது பணியில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் இணையாக ஓய்வுதியம் அளிக்க, சம்பள கமிஷன் குழு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக வெளியாகும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஓய்வுதிய தொகையை 3,500 ரூபாயில் இருந்து 9,000 வரை உயர்த்துவதன் மூலம் இந்த வித்தியாசத்தைச் சரி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது. புதிய திட்டத்தின் மூலம் ஓய்வுதியதாரர்களுக்கு வருடத்திற்கு 65,000 ரூபாய்க் கூடுதலாகக் கிடைக்கும். இத்தொகையைச் சேமிப்பின் பக்கம் செல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் சரியான வழியில் செலவு செய்ய வைக்க வேண்டும் என ICRA அமைப்பு மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. மேலும் இந்த அறிவுரைக்குப் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் பிற முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய மத்திய அரசு அதிகளவிலான வாய்ப்புகளை அளித்து வருகிறது. 7வது சம்பள கமிஷன் மூலம் நாட்டின் தேவைக்கான அளவுகள் 4 மடங்கு அதிகரிக்கும் , இதனால் இந்திய பொருளாதார வளர்ச்சி புதிய மற்றத்தை சந்திக்க உள்ளது என இந்தியா ரேடிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் டிகே பேன்ட் தெரிவித்துள்ளார்.
ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் (OROP)
கொடுப்பனவு (allowances)
2 முறைகள்
ICRA அமைப்பு
வீட்டுக் கடன்
நாட்டின் வளர்ச்சி


Click it and Unblock the Notifications