2 கோடி ரூபாய் சம்பளத்துடன் ஐஐடி மாணவரை வளைத்துப் போட்டது கூகுள்..!

புனே: நாட்டின் முன்னணி கல்லூரிகளில் ஒன்றான ஐஐடி கரக்பூரை சேர்ந்த அபிஷேக் பண்ட் என்ற கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவு மாணவருக்குக் கூகுள் நிறுவனம் 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வளைத்துப்போட்டுள்ளது.

பொதுவாகப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஐஐடி மற்றும் ஐஐஎம் மாணவர்கள் மீது தனி ஈர்ப்பு உண்டு, இந்நிலையில் 2016ஆம் ஆண்டில் கல்லூரியை விட்டு வெளியேறு மாணவர்களை நிறுவன பணியில் அமர்த்த கூகுள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் இறங்கியுள்ளது.

அபிஷேக் பண்ட்

அபிஷேக் பண்ட்

ஐஐடி கல்லூரியிலி இறுதியாண்டு பொறியியல் பயின்று வரும் அபிஷேக் பண்ட், கூகுள் நிறுவனத்தில் 3 மாத இன்டர்ன்ஷிப் வெற்றிகரமாக முடித்த பிறகு கூகுள் நிறுவனம் இவருக்கு நிறுவனப் பங்குகளுடன் 2 கோடி ரூபாய் சம்பளம் அளித்துள்ளது.

அதற்கு முன் இவர் கூகுள் நிறுவனத்தின் டிசைன் சொல்யூஷன் செல் பிரிவில் இணைய முக்கியமான நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

அமெரிக்கச் சிட்டிசன்..

அமெரிக்கச் சிட்டிசன்..

அபிஷேக் பண்ட் அவர்களின் குடும்பம் 2006ஆம் ஆண்டுப் புனே வரும் முன் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதனால் இவர் பிறந்ததும், வளர்ந்ததும் அமெரிக்காவில் தான். தற்போது தனது வேலைக்காக மீண்டும் அபிஷேக் அமெரிக்கா செல்ல உள்ளார்.

பயணம்

பயணம்

புனே முதல் கலிபோர்னியா வரையிலான பயணம் மிகவும் விறுவிறுப்பாக எனக்கு அமைந்தது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் இன்டர்னாகப் பணியாற்றி அனுபவம் அற்புதமாக இருந்தது என அபிஷேக் தெரிவித்தார்.

செப்டம்பர் 2016

செப்டம்பர் 2016

கூகுள் நிறுவனத்தின் இன்டர்ன்ஷிப் தேர்வாக 2 முறை தொலைப்பேசி மூலம் தேர்வுகளும், ஒரு முறை கோடிங் தேர்வு வைக்கப்பட்டது. இந்த மூன்றிலும் வெற்றிபெற்றபின் 3 மாதம் கூகுள் நிறுவனத்தின் மொடைன்வியூவ் அலுவலகத்தில் இன்டர்னாகப் பணியாற்றினேன்.

தற்போது மேற்படி தேர்வுகளை வெற்றிபெற்றால் 2016ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் கூகுள் நிறுவனத்தின் இணைந்திடுவேன் என அபிஷேக் தனது அனுபவத்தைக் கூறினார்.

 

சேத்தன் காககர்

சேத்தன் காககர்

சில நாட்களுக்கு முன்னரே டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சேத்தன் காககர் என்ற பொறியியல் மாணவருக்கு 1.27 கோடி ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் இவரைப் பணியில் அமர்த்தியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+