கோயம்புத்தூர்: இந்தியாவில் புதிய வர்த்தகத்திற்குச் சிறந்த இடமாகக் கருதப்படும் கோயம்புத்தூரில், ஆன்லைன் சூப்பர் மார்கெட் நிறுவனமான பிக் பேஸ்கட் தனது வர்த்தகத்தைப் புதன்கிழமை துவங்கியுள்ளது.
இதுவரை மெட்ரோ நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வந்த பிக் பேஸ்கட் 9வது நகரமாகக் கோயம்புத்தூரில் தனது சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிக் பேஸ்கட்
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு 2ஆம் தர நகரங்களில் அதிகளவிலான வரவேற்பு கிடைப்பதில்லை என்ற கருத்து உண்டு. ஆனால் தற்போது இதன் நிலை முழுமையாக மாறியுள்ளது.
கோயம்புத்தூர் நகரத்தில் மட்டும் சுமார் 8.4 லட்சம் பேர் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதுவே ஆன்லைன் வர்த்தகத்திற்குச் சிறந்த அடித்தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனப் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவின் தலைவர் மீரா ஐயர் தெரிவித்தார்.
மதுரை
கோயம்புத்தூர் முன் எங்களது சேவை மதுரையில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகத் துவங்கப்பட்டது எனவும் மீரா ஐயர் குறிப்பிட்டார்.
தொண்டமுத்தூர் சாலை
தற்போது பிக் பேஸ்கட் நிறுவனம் கோவை தொண்டமுத்தூர் சாலையில் சுமார் 22,000 சதுரடி பரப்பளவில் சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்துள்ளது. முதல் கட்டமாகச் சேமிப்பு கிடங்கிற்கு 40 கிலோமீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு மட்டும் சேவை அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
கூட்டணி
பிராண்ட் பொருட்களை வாங்குவதைத் தாண்டிலும், பிக் பேஸ்கட் கோயம்புத்தூர் பகுதியைச் சுற்றியுள்ள பல உள்ளூர் பில்களுடன் அரிசி, பருப்பு, மசாலா பொருட்கள், இட்லி மாவு, அப்பளம் மற்றும் இதர பொருட்களை மொத்தமாக வாங்கவும் கூட்டணி அமைத்துள்ளது.
பழம் மற்றும் காய்கறிகள்
மேலும் பழம் மற்றும் காய்கறிகள் மொத்த விற்பனையாளர்களைத் தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கத் திட்டமிட்டுள்ளது.
பற்றாக்குறை வரும் பட்சத்தில் உள்ளூர் விற்பனையாளர்களிடம் இருந்து பெறவும் நாங்கள் தாயாராக உள்ளோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கறி...
அதுமட்டும் அல்லாமல் கோயம்புத்தூரில் உள்ள சில இறைச்சி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இதன் படி தற்போது சிக்கன், மட்டன், மீன் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என மீனா ஐயர் நிறுவன வர்த்தக முறையை விவரித்தார்.
கூடிய விரைவில் பிக் பேஸ்க்ட் நிறுவனம் பதம்படுத்தப்பட்ட மற்றும் குளிருட்டப்பட்ட இறைச்சியைத் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளது.
விரிவாக்கம்
மதுரை மற்றும் கோயம்புத்தூர் வர்த்தகத்தில் கண்டிப்பாக வெற்றி அடைவோம். இதன் மூலம் எங்களது சேவை தமிழ்நாட்டில் சில முக்கியப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
வாடிக்கையாளர்கள்
டிசம்பர் மாத துவக்கத்தில் கோயம்புத்தூர் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 25,000 வாடிக்கையாளர்களைப் பெறுவோம் என்று நம்புகிறோம் என மீனா ஐயர் தெரிவித்தார்.
தப்பித்தது பிக் பேஸ்கட்
பிக் பேஸ்கட் நிறுவனத்திற்கு ஷாரூக்கான் பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார். இவரது கருத்துக்கு இந்நிறுவன பெயர் அடிப்படவில்லை என்பது தான் மகிழ்ச்சி. அட இருங்கப்பா பொறுத்திருந்து பார்போம்.
More From GoodReturns

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications