டெல்லி: இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல்-செப்டம்பர் காலாண்டில் செய்யப்பட்ட அன்னிய முதலீட்டின் அளவு சுமார் 16.63 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது தற்போது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

இக்காலகட்டத்தில் சிங்கப்பூரில் இருந்து இந்திய சந்தைக்கு 6.69 பில்லியன் டாலர் முதலீட்டு செய்யப்பட்டு, அதிகளவில் முதலீடு செய்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தைப் படித்துள்ளது. இதைத் தொடர்ந்து மொரிஷியஸ் 3.66 பில்லியன் டாலர், நெதர்லாந்து 1.09 பில்லியன் டாலர் மற்றும் ஜப்பான் 815 மில்லியன் டாலர் முதலீடு செய்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
அதிக முதலீடு பெற்ற துறைகளில் கம்பியூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் முதல் இடத்தில் உள்ளது.
நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டு அளவு சுமார் 27 சதவீதம் உயர்ந்து 30.93 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு சுமார் 15 துறைகளில் அன்னிய முதலீட்டுக்கான தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 2015ஆம் நிதியாண்டின் முடிவில் அன்னிய முதலீட்டின் அளவு சுமார் 358 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications