பெங்களூரு: இந்தியாவின் 3வது மிகப்பெரிய ஐடி நிறுவனமான விப்ரோ, ஜெர்மனி நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான செலன்ட் ஏஜி நிறுவனத்தைச் சுமார் 514 கோடி ரூபாய் முதலீட்டில் கைப்பற்ற உள்ளது
இதற்காக விப்ரோ, ஜெர்மனி நாட்டின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான லேண்டஸ்பாங்க் (LBBW) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் இந்த 514 கோடி ரூபாய் டீலில் LBBW 30-40 சதவீதம் வரை நிதியுதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செலன்ட் ஏஜி நிறுவனத்தில் அப்படி என்ன இருக்கு, எதற்கு விப்ரோ 514 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது. இதனால் விப்ரோவிற்கு என்ன லாபம்.. வாங்க அதையும் பார்ப்போம்.
செலன்ட் ஏஜி
இந்நிறுவனம் DACH பகுதி எனப்படும் டச்சஸ்லேண்டு, ஆஸ்திரியா மற்றும் சுவிஸ் நாடுகள் பகுதிகளில் சுமார் 14 வருடங்களாக ஐடி சேவை அளித்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் DACH பகுதியைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே விப்ரோ நிறுவனத்திற்கு ஜாக்பாட் போன்றது.
87 மில்லியன் யூரோ
செலன்ட் ஏஜி நிறுவனத்தில் சுமார் 800 ஆலோசகர்கள் DACH பகுதியில் பணியாற்றி வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் சர்வர் மற்றும் டேட்டா சென்டர்கள் அனைத்தும் இப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதால் விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
2014ஆம் ஆண்டு நிதியறிக்கையின் படி செலன்ட் ஏஜி சுமார் 87 மில்லியன் யூரோ வருவாய் பெற்றுள்ளது.
DACH பகுதி
இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் விப்ரோ DACH பகுதியில் அழுத்தமான வர்த்தகம் மற்றும் புதிய சந்தையும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. மேலும் இப்பகுதியில் முக்கிய வர்த்தகமாகத் திகழும் ஆட்டோமோடிவ் துறையில் விப்ரோ புதிய வாடிக்கையாளர்களையும் வர்த்தகத்தையும் பெறும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
டீல்
விப்ரோ-LBBW கூட்டணியில் செய்யப்படும் செலன்ட் ஏஜி நிறுவனத்தின் கைப்பற்றுதல் நடவடிக்கை வருகிற மார்ச் 31ஆம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications