டெல்லி: பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகை பெருமளவு பங்குச்சந்தையிலும், சிறிய அளவு கடன் சந்தையும் முதலீடு செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி நவம்பர் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 6,500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 58,000 கோடி ரூபாயைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளதாகச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.
2014-15ம் நிதி ஆண்டில் வெறும் 40,722 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில் 58,000 கோடி வரை முதலீடு செய்துள்ளது. 2015ஆம் நிதியாண்டு நிறைவடைய மேலும் 4 மாதங்கள் உள்ள நிலையில் இதன் அளவு 70,000 கோடி வரை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-14-ம் நிதி ஆண்டுகள் வரையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 68,000 கோடி ரூபாயைத் தொகையை இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.
செபி அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி நவம்பர் மாதத்தில் மட்டும் 6,548 கோடி ரூபாயைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications