டெல்லி: மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை குழுவின் புதிய அறிவிப்பால் திங்கட்கிழமை சிகரெட் விற்பனை அமோகமாக இருந்தது. ஆனால் பங்குச்சந்தையில் சிகரெட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதம் சரிந்தது ஊசல் ஆடியது.
சரக்கு மற்றும் சேவை வரியின் அறிமுகத்தில் கேடு விளைவிக்கும் சிகரெட், பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு 40 சதவீத வரியை விதிக்க வேண்டும் என ஜிஎஸ்டி குழு பரிந்துரை செய்துள்ளது.

இதனால் சந்தையில் சிகரெட் விற்பனை அதிகரித்துக் காணப்பட்டாலும், மும்பை பங்குச்சந்தையில் ஐடிசி, காட்ஃபிரி பிலிப்ஸ் மற்றும் விஎஸ்டி இன்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
இந்நிலையில் நிதியமைச்சகத்தின் குழுவின் தலைவரான தலைமை நிதி ஆலோசகர் அரவிந்த சுப்பிரமணியன் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி 17-18 சதவீதமாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications