கொல்கத்தா: இந்திய மொபைல் உற்பத்தி சந்தையில் 7 வருடமாக வெற்றிக்கொடியை நாட்டி வரும் மைக்ரோமார்ஸ், மார்ச் 2015ஆம் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 10,000 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் உலகின் முன்னணி நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி செய்யும் சோனி நிறுவனத்திற்கு நிகராக மைக்ரோமேக்ஸ் உயர்ந்துள்ளது. இதனால் அடுத்தச் சில வருடங்களில் இந்திய சந்தையில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் சோனி நிறுவனத்தை ஓடம்கட்டி மைக்ரோமேக்ஸ் முன்னணிலை வகிக்க உள்ளது.
விற்பனையில் வீர்..
2014-15ஆம் நிதியாண்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் இன்பராமேடிக்ஸ் விற்பனையில் சுமார் 47 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 10,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோனியின் நிலை என்ன..?
இதேகாலக்கட்டத்தில் சோனி நிறுவனத்தின் இந்திய கிளையின் விற்பனை 10 சதவீதம் மட்டும் உயர்ந்து 11,010 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளது.
இவ்விரு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. 2015ஆம் நிதியாண்டில் சோனி நிறுவனத்தின் நிலையை மிக எளிமையாக மைக்ரோமேக்ஸ் எட்டிவிடும்.
2 வருடத்திற்கு முன் சோனியின் பாதி நிலை கூட மைக்ரோமேக்ஸ் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனை மற்றும் மறுசீரமைப்பு..
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய 4ஜி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மற்றும் அதன் வெற்றி 2015ஆம் ஆண்டில் கண்டிப்பாகச் சோனியை எட்டிவிடும்.
இந்நிலையில் சோனி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தனது மொபைல் விற்பனையை அதிகரிக்க மறுசீரபமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால் 10,000 கோடி வருவாய் என்னும் நிலையில் இருந்து சோனி வெளியேற அதிகளவில் வாய்ப்புள்ளதாக மொபைல் விற்பனை சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
டிவி..
இந்தியாவில் சோனி நிறுவனத்தின் மொபைல் விற்பனை மந்தமாக இருந்தாலும், டிவியின் விற்பனை மிகவும் அதிகம். இதனால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் டிவி விற்பனை அளவுகளை ஒப்பிட்டால் மிகப்பெரிய வித்தியாசம் நிலவும். இப்பிரிவில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்திற்குச் சோனி மிகப்பெரிய போட்டியாகவே விளங்குகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் பிரச்சனை
இத்தகைய லாபகரமான சூழ்நிலையில் மைக்ரோமேக்ஸ் நிர்வாகக் குழுவில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் அடிப்படை நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவே மைக்ரோமேக்ஸ் திணறி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications