போர் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. 3.5 பில்லியன் டாலர் டீல்..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய ராணுவத்திற்குத் தேவையான போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரீக்கர், அமெரிக்க உடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கச் சென்றுள்ளார்.

 

வருகிற டிசம்பர் 10ஆம் தேதி, 3.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தாக உள்ளது.

போர்விமானங்கள் மற்றும் ஆயுதங்கள்

போர்விமானங்கள் மற்றும் ஆயுதங்கள்

3.5 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் பி-81 ரகக் கடல் ரோந்து விமானம், சி-17 குளோப்மாஸ்டர்-3 ரக ராணுவ சரக்கு ஊர்தி மற்றும் எம்777 அல்ட்ரா லைட் ஹவிட்சர்ஸ் ஆயுதங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த டீல் மத்திய அரசின் டிபென்ஸ் டிரேட் மற்றும் டெக்னாலஜி இன்ஷியேடிவ் (DTTI) நிறுவனத்தின் கீழ் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதல் முறையாக

முதல் முறையாக

ஆயுதங்களை வாங்குவதற்காக முதல் முறையாக அமெரிக்கா செல்லும் மனோகர் பாரீக்கர் டிசம்பர் 9ஆம் தேதி அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சரான ஆஷ்டன் கார்ட்டர் உடன் பேச்சுவார்த்தை நடந்தவும், அதைத் தொடர்ந்து டிசம்பர் 10ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் திட்டமிட்டுள்ளார்.

பெண்டகன்
 

பெண்டகன்

ஆஷ்டான் கார்டர் மற்றும் மனோகர் பாரீக்கர் மத்தியிலான இந்தச் சந்திப்பு அமெரிக்கப் பெண்டகன் கட்டிடத்தில் நடக்க உள்ளது.

இந்தியா - அமெரிக்கா

இந்தியா - அமெரிக்கா

இந்நிலையில் இந்தியா அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ராணுவ ஆயுதங்களைத் தயாரிக்க விரும்புகிறது, இதற்காக மத்திய அரசும், பாதுகாப்புத் துறையும் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்த அன்னிய முதலீட்டுத் தளர்வுகள் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் இந்திய சந்தையில் 74 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுடன் ஆர்வமுடன் இருக்கிறது.

அடுத்த 15 வருடத்தில் இந்தியாவில் இருந்து பல நூறு பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிலை உருவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Deals worth $3.5-b likely to be inked during Parrikar US visit

Defence deals worth $3.5 billion are expected to be signed during Defence Minister Manohar Parrikar’s meeting with his American counterpart Ashton Carter in Washington on December 10.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X