வாஷ்ங்டன்: சர்வதேச நாடுகள் மத்தியில் அதிகளவிலான கருப்புப் பணத்தை வெளியேற்றிய நாட்டுகளின் பட்டியலில், இந்திய 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
2004-2013ஆம் நிதியாண்டுகளில், வருடத்திற்குச் சுமார் 51 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை முறையற்ற வகையில் இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு துறையின் பட்ஜெட் அளவே 50 பில்லியன் டாலர் தான்.
இந்தியா
அமெரிக்க நாட்டின் சிந்தனை குழுவான குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு செய்த ஆய்வில் 2004-13ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 51 பில்லியன் டாலர் கருப்புப் பணம் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளது.
இந்தப் பணம் சுவிஸ் வங்கிகள், உட்பட உலகின் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நாணய வடிவிலாகவோ அல்லது தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளாகவோ உள்ளது.
டாப் 3 நாடுகள்
இப்பட்டியலில் 139 பில்லியன் டாலருடன் முதல் இடத்தைச் சீனா பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ரஷ்யா 104 பில்லியன் டாலர், மெக்சிகோ 52.8 பில்லியன் டாலருடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளதாகக் குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு தெரிவித்துள்ளது.
2013ஆம் ஆண்டில் உச்சம்..
வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மட்டும் 2013ஆம் ஆண்டில் சுமார் 1.1 டிரில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளியேறியுள்ளது. இதுவே கடந்த 10 வருடங்களில் உச்சமாகும்.
இக்காலகட்டத்தில் சீனாவில் இருந்து மட்டும் சுமார் 258.64 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளியேறியுள்ளது.
மொத்த அளவுகள்
குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி அமைப்பின் படி 2004-14ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 510 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது. சீனாவில் இதன் அளவு 1.39 டிரில்லியன் டாலர், ரஷ்யாவில் 1 டிரில்லியன் டாலர்.
குளோபல் பைனான்சியல் இன்டகிரிட்டி
வர்த்தகப் பரிமாற்றத்தில் அதிகளவிலான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சரியான மதிப்பீடுகள் செய்வதன் மூலம் கருப்புப் பணத்தை அதிகளவில் குறைக்க முடியும்.
அதேபோல் அட்டீஸ் வரியைப் பயன்படுத்துவதன் மூலம் கருப்புப் பணப் பரிமாற்றத்தை அதிகளவில் குறைக்க முடியும்.
கருப்புப் பணம்
தற்போதைய நிலையில் கருப்புப் பணத்தை ஒழிக்க உலகில் பல நாடுகள் கடுமையான சட்ட திட்டங்களை வகுக்கத் துவங்கியுள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று.
More From GoodReturns

சீன CCTV கேமராக்களுக்கு மொத்தமாக செக்.. மத்திய அரசின் புதிய முடிவு..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications