டெல்லி: இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவும், வாடிக்கையாளர்களைப் பெறவும் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சந்தையில் அலப்பறை கொடுத்துக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில், வோடாபோன் இந்தியா சத்தமில்லாமல் கேரளாவில் தனது முதல் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பிரிட்டன் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன், தனது இந்திய கிளையில் பல பில்லியன் டாலர் முதலீடு செய்து 4ஜி சேவையையும் தனது நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாகப் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக இந்தியாவில் 4ஜி என்னும் அதிவிரைவு தொலைத்தொடர்பு இணைப்பை கேரளாவில் அறிமுகப்படுத்தியுள்ளது வோடாபோன்.

இந்நிலையில் நாட்டின் இரண்டாவது தொலைத்தொடர்பு நிறுவனமான வோடாபோன் தனது 4ஜி சேவையைக் கொச்சியில் அறிமுகம் செய்த கையோடும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு பகுதியில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் இச்சேவையை மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா பகுதியிலும் விரிவாக்கம் செய்ய வோடாபோன் திட்டமிட்டுள்ளது.
இச்சேவைக்காக வோடாபோன் கேரளாவில் மட்டும் கடந்த 18 மாதத்தில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications