மும்பை: 10 வருடங்களுக்குப் பின் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்ந்த முயற்சி செய்து வரும் நிலையில் பல்வேறு பொருளாதாரச் சூழ்நிலைகளால் கடந்த 2 மாதங்களாகக் காலங்கடத்து.
இந்நிலையில் வருகிற 15, 16 ஆம் தேதிகளில் வட்டி உயர்விற்காகப் பிரத்தியேகமாக முக்கியக் கூட்டத்தை நடத்துகிறது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகளை உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இத்தககைய தருணத்தில் நம்ம ரகுராம் ராஜன் என்ன கூறுகிறார்...? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் நடத்த உள்ள முக்கியக் கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை நிச்சயம் உயர்த்தும் என்று என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருக்கிறார்.

கொல்கத்தா வில் நடந்த ரிச்ர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ரகுராம் ராஜன் அமெரிக்கப் பெடரல் வங்கியின் நிலை மற்றும் அது எடுக்க உள்ள முடிவுகள் குறித்த கணிப்புகளைக் கூறினார்.
மேலும் அவர் அடுத்த வாரம் நடக்க இருக்கும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படலாம் எனவும் ராஜன் தெரிவித்தார்.

இதனால் இந்திய சந்தை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறங்கங்களைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி தயாராக உள்ளது. அமெரிக்க அறிவிப்புகளால் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் என்ன நடக்கும் என்பதை முழுமையாகக் கணிக்க முடியாது என்றும்ரகுராம் ராஜன் கூறினார்.
அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்துவது என்பது கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி கூறியிருக்கும் கருத்துகளைப் பார்க்கும்போது நாங்கள் வட்டி விகிதத்தை எதிர்பார்க்கிறோம். இதனால் இந்திய நிதிச்சந்தையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.

அமெரிக்காவின் கடன் மற்றும் நிதிக் கொள்கை முடிவுகளை எடுக்க, அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் 16-ம் தேதி கூடுகிறது. தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் பூஜ்ஜியம் என்ற நிலையிலே இருக்கிறது.
கடந்த 10 வருடத்தில் இப்போதுதான் முதல் முறையாகத் தனது வட்டி விகிதம் உயர்த்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.


Click it and Unblock the Notifications