உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம் -1.99% ஆக உயர்வு!

டெல்லி: நவம்பர் மாதத்தில் பருப்பு மற்றும் வெங்காயம் போன்ற முக்கிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு -1.99 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த 13 மாதமாக அதாவது 2014ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு பணவாட்ட நிலையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 மாதங்களாக உயர்வு

3 மாதங்களாக உயர்வு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் கணக்கிட மொத்த விலை பணவீக்கம் மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கத்தின் அளவு மிகவும் முக்கியக் காரணியாகும். இந்நிலையில் 13 மாதமாகப் பணவீட்ட நிலையில் இருந்த மொத்த விலை பணவீக்கம் கடந்த 3 மாதமாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அக்டோபர் மாதத்தில் இதன் அளவு 3.81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அதன் அளவு -0.17 சதவீதமாக இருந்தது.

 

உணவு பணவீக்கம்

உணவு பணவீக்கம்

இந்தியாவில் ஏற்பட்ட பருப்பு மற்றும் வெங்காயம் பற்றாக்குறையின் மூலம் இதன் விலை தாறுமாறாக உயர்ந்து நவம்பர் மாதத்தில் உணவு பணவீக்கம் 5.20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இதன் விலை 2.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

நவம்பர் மாதத்தில் பருப்பு வகைகளின் மீதான பணவீக்கம் 58.17 சதவீதமாக உயர்ந்தது. அதேபோல் வெங்காயம் 52.69 சதவீதமாகவும், பிற காய்கறிகளின் மீதான பணவீக்கம் 14.08 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

அதேபோல் எரிபொருள் மற்றும் பவர் துறை சார்ந்த வர்த்தகம் -11.09 சதவீத பணவாட்ட நிலை உருவாக உள்ளது. இதேபோல் உற்பத்தி பொருட்கள் -1.42 சதவீதமாக இருந்தது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

இந்நிலையில் இன்று மாலை நவம்பர் மாதத்திற்கான சிபிஐ எனப்படும் சில்லறை விலை பணவீக்கம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+