தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 30% வரை ஊதிய உயர்வு.. அடித்தது ஜாக்பாட்..!

டெல்லி: இந்திய சந்தையின் வளர்ச்சிக்கு அக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட 9.8 சதவீத தொழிற்துறை உற்பத்தி அளவுகள் முக்கியச் சான்றாக அமைந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 10-30 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வேலைவாய்ப்பு சந்தை தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில் நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எப்போதும் இல்லாமல் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

2016ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு 30 சதவீதம் வரை உயர என்ன காரணம்..?

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

2015ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை சில குறிப்பிட்ட துறையில் மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அனைத்து முக்கியத் துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டிலும் இதேபோன்ற நிலை நிலவும் என வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறியுள்ளது.

சரி ஊதிய உயர்விற்கு என்ன காரணம் என நீங்கள் கேட்பது புரிகிறது. சரி வாங்க விஷயத்திற்குப் போவோம்..

 

என்ன காரணம்

என்ன காரணம்

இந்திய சந்தையில் 2016ஆம் ஆண்டில் அதிகளவிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக முக்கியக் காரணம் ஈகாமர்ஸ் துறை மற்றும் மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டம் தான்.

ஊழியர்கள் தேவை அதிகரித்துள்ள இத்துறைகளில், தனியார் நிறுவனங்கள் 1000 கணக்கில் ஊழியர்களை நியமிக்கப்படும் வேலையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது 7வது சம்பள கமிஷன் அறிக்கையை வெளியிட உள்ளதால், அரசு ஊழியர்களின் சம்பள நிலைக்கு ஏற்றவாறு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளமும் உயர்த்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் 2016ஆம் நிதியாண்டில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 10-30 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 

டீம் லீஸ்..

டீம் லீஸ்..

2016ஆம் ஆண்டில் வழக்கம் போல் ஈகாமர்ஸ் மற்றும் ஐடி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரிக்கும், அதேபோல் மேக் இன் இந்தியா, மற்றும் அன்னிய முதலீட்டுத் தளர்வுகள் மூலம் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைய உள்ளது என வேலைவாய்ப்பு நிறுவனமான டீம் லீஸ் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

ஸ்மார்ட் சிட்டி

மேலும் டிஜிட்டல் இந்தியா மற்றும் மத்திய அரசின் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மூலம் 2ஆம் தர நகரங்களில் அதிகளவிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

ஊதிய உயர்வு

ஊதிய உயர்வு

இத்தகைய சூழ்நிலையில் தனியார் நிறுவனங்கள் திறமைசாலிகளைத் தக்கவைத்துக்கொள்ள அதிகளவிலான ஊதிய உயர்வு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

உண்மை நிலை!!

உண்மை நிலை!!

டீம் லீஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பை ஒரு முழு கட்டுரை வடிவில் உங்களுக்காக.

இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!

 

தொழிற்துறை உற்பத்தி

தொழிற்துறை உற்பத்தி

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+