மும்பை: கடந்த 2 வாரக் காலமாகத் தொடர்ந்து குறைந்து வரும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 67 ரூபாயாகக் குறைந்து 2 வருடச் சரிவை எட்டியுள்ளது.
இந்திய ரூபாய் போல் சீனா நாணயமான யுவான், அமெரிக்க டாலருக்கு எதிராக 4.5 வருடச் சரிவை இன்று சந்தித்துள்ளது.

அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகளை எதிர்பார்த்து சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் கடந்த 1 மாத காலமாக உலகச் சந்தைகளில் செய்திருந்த டாலர் முதலீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். இதனால் நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
வரும் 15, 16ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கியக் கூட்டத்தில் வட்டி உயர்விற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

மேலும் அமெரிக்கச் சந்தையில் நான்-பார்ம் பிரிவின் கீழ் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதால், இம்முறை பெடர்ல ரிசர்வ் கண்டிப்பாகத் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் அவர்களும் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த 75 சதவீத வாய்ப்புகள் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 1 வருட காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 6 சதவீத குறைந்துள்ளதாக இந்திய நாணய சந்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் பிற நாட்டு நாணயங்களின் மதிப்பீடுகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications