டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான ஸ்வச் பாரத் திட்டத்திற்கு, உலக வங்கி சுமார் 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்ட மத்திய அரசு சில வாரங்களுக்கு அனைத்துச் சேவைகளிலும் 0.5% சதவீத கூடுதல் வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்குச் சரியான சுகாதார வசதிகள் அளிக்க மத்திய அரசு உருவாக்கிய இத்திட்டத்திற்கு உலக வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன் அளித்துள்ளது. மத்திய அரசின் இத்திட்டம் 2019ஆம் ஆண்டில் நிறைவடைய உள்ளது.
உலக வங்கியின் ஆய்வுகளின் படி உலகளவில் 2.4 பில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் தவிப்பதாகவும், அதில் 750 மில்லியன் மக்கள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இதிலும் இந்த 750 மில்லியன் மக்கள் எண்ணிக்கையில் 80 சதவீதம் பேர் இந்திய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் 500 மில்லியன் மக்கள் திறந்த வெளி கழிப்பறைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் இதனால் பல விதமான தொற்றுகள் பரவி வருவதாகவும், சில தொற்றுகள் மூலம் மக்கள் இறக்கும் நிலையும் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதிலும் 10ல் ஒரு மரணம் இந்தியாவில் மோசமான சுகாதார வசதிகள் மூலம் நடைபெறுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் மத்திய அரசு மட்டும் அல்லாமல் மாநில அரசும் முனைப்புடன் செயல்பட்டு விரைவில் இத்தகைய நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் உலக வங்கியின் 1.5 பில்லியன் டாலர் கடனில் 25 மில்லியன் டாலர் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications