நியூயார்க்: சர்வதேச நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஃபோர்ப்ஸ் நிறுவனம், இம்முறை 2015ஆம் ஆண்டில் வர்த்தகம் செய்யச் சிறந்த நாடுகள் குறித்து மிகப்பெரிய ஆய்வை 144 நாடுகளில் நடத்தியுள்ளது. இதில் இந்தியாவிற்கு 97வது இடம் கிடைத்துள்ளது.
97வது இடத்தில் இந்தியா..!
இந்தியாவில் வர்த்தகத்தில் உள்ள இடர்பாடுகள், குறைவான நாணய பரிமாற்ற சுதந்திரம், வன்முறை மற்றும் ஊழல் காரணமாக ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் கஜகஸ்தான், கானா போன்ற நாடுகள் முன்னேறி இந்தியா 97 வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டென்மார்க்
இந்நிலையில் உலகில் வர்த்தகம் செய்யச் சிறந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா
வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா 2015ஆம் ஆண்டில் 22 வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சவால்கள்
97வது இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவில் பல சவால்கள் உள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதில் சில வருமை, ஊழல், வன்முறை, மற்றும் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, திறனற்ற மின்சார உற்பத்தி, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை, விவசாயத் துறையில் குறைந்த அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்த அளவிலான வேலைவாய்ப்பு உருவாக்குதல் ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாதகமான சூழ்நிலை
இதேபோல் நீண்ட கால வளர்ச்சி காரணிகளுக்கு இந்தியாவில் இளைஞர்கள் மக்கள் தொகையின் எண்ணிக்கை, முதலீட்டு அளவுகள் தனி நபருக்கான சேமிப்பு அளவுகள் ஆகியவை மிகவும் சாதகமாக உள்ளது எனவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications