ஹெச்-2பி விசா எண்ணிக்கை 400% உயர்வு.. அமெரிக்கா அறிவிப்பு..!

வாஷிங்டன்: இந்தியர்கள் அதிகம் நாடும் ஹெச்-1பி விசா வழங்குவதில் ஊதிய அடிப்படையிலான கட்டுப்பாடுகள், இரட்டிப்புக் கட்டணங்கள் எனத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனங்களை அச்சுறுத்தி வந்த அமெரிக்க அரசு. ஹெச்-2பி விசா எண்ணிக்கை 400 சதவீதம் வரை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

ஹெச்-2பி விசா எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்காவில் ப்ளூ காலர் ஜாப்ஸ் எனப்படும் இரண்டாம் தர வேலைகளுக்குப் பிற நாட்டவர்களை அமர்த்த அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஹெச்-2பி விசா

ஹெச்-2பி விசா

அமெரிக்க அரசு ஹெச்-1பி விசாக்களைத் திறன்படைத்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் அளிக்கும் வகையில், திறன் தகுதிகள் தேவையில்லாத பணிகளை அதாவது ஹோட்டல், தீம்பார்க், பார், கட்டிட வேலை, டிரைவர்கள் போன்ற பணிகளில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்-2பி விசா வழங்குகிறது.

இத்தகைய பணிகளையே நாம் ப்ளூ காலர் ஜாப்ஸ் என அழைப்போம்.

 

1.1 டிரில்லியன் டாலர் செலவின அறிக்கை

1.1 டிரில்லியன் டாலர் செலவின அறிக்கை

2016ஆம் ஆண்டுக்கான 1.1 டிரில்லியன் டாலர் செலவின அறிக்கையில் ஹெச்-2பி விசா எண்ணிக்கையை உயர்த்துவதற்கான உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 400 சதவீத உயர்விற்கான ஒப்புதல்களும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

400 சதவீத உயர்வு

400 சதவீத உயர்வு

தற்போதைய நிலையில் அமெரிக்க அரசு வருடத்திற்கு 66,000 ஹெச்-2பி விசா வழங்கி வருகிறது. இதனை 400 சதவீதம் வரை உயர்த்துவதன் மூலம் 2,50,000 ஆக உயர உள்ளது.

இந்தியர்கள்

இந்தியர்கள்

பொதுவாக இந்தியர்கள் ப்ளூ காலர் ஜாப்ஸ் வேலைக்காகத் துபாய் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் செல்ல விரும்புவதால், அமெரிக்காவில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள அமெரிக்காவில் பிற நாட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

இதனால் இந்த ஹெச்-2பி விசா எண்ணிக்கையை உயர்வால் இந்திய சந்தையில் மிகப்பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.

 

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

ஹெச்-2பி விசா வழங்குவதில் 400 சதவீத உயர்வால் அமெரிக்காவில் இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+