டெல்லி: இந்திய ரயில்வே துறையில் மலிவான விலையில் விற்கப்படும் ரயில் நீர் என்னும் பாட்டில் தண்ணீர் விற்பனையில் செய்த ஊழல் மூலம் ரயில்வே துறை சுமார் 19.5 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது.
இதனை விசாரித்த வந்த சிபிஐ, இந்திய ரயில்வே துறையின் 2 முன்னாள் தலைமை வர்த்தக மேலாளர்கள், ஒரு வியாபாரி, ஒரு தனியார் நிறுவனத்தின் சீஈஓ மற்றும் 8 நிறுவனங்கள் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்துள்ளது.
ரயில்வே துறையில் எம்.எஸ். சலியா மற்றும் சன்தீப் சிலாஸ் ஆகிய கேட்ரிங் பிரிவின் முன்னாள் தலைமை வர்த்தக மேலாளர்கள், ஆர்கே அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சீஈஓ, ராஜீவ் மிட்டல் ஒரு நிறுவனத்தின் தலைவர் மற்றும் சத்யம் கேடர்ஸ், அம்பூஜம் ஹோட்டல்ஸ், பிகே அசோசியேட்ஸ், சன்ஷைன் கேடர்ஸ், விரின்தாவன் புட் பிராடக்ட்ஸ், புட் வோல்டு மற்றும் ஆர் டி ஷர்மா அண்ட் சன்ஸ் ஆகிய 8 நிறுவனங்கள் இக்குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்துச் சிபிஐ-யின் செய்திதொடர்பாளர் தேவ்பிரீத் சிங் கூறுகையில் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்ட அனைவரும் கிரிமினல், ஏமாற்றுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுப் பாடியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். குறிப்பிட்ட நிறுவனங்கள் ராஜ்தானி மற்றும் ஷாத்படி ரயில்களில் விற்பனை செய்யப்பட்ட பாட்டில் தண்ணீரின் மதிப்பு 5-7 ரூபாய் இருந்தபோது அரசிடம் இந்நிறுவனங்கள் 15 ரூபாய் தொகையைப் பெற்றுக்கொண்டு அரசை ஏமாற்றியுள்ளனர். இதனால் இந்திய ரயில்வே துறைக்கு 19.55 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையின் போது குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்திய போது சிபிஐ அதிகாரிகள் 28.5 கோடி ரூபாய் ரொக்கத்தைக் கைப்பற்றியது. தற்போது அளிக்கப்பட்டுள்ள இழப்பு அளவுகள் வெறும் மேற்கு ரயில்வே துறையைச் சார்ந்தது மட்டுமே, சிபிஐ அமைப்புக்குத் தேவைப்பட்டால் இதுகுறித்த விசாரணையை மேலும் 16 மண்டத்திற்கு விரிவாக்கம் செய்யும் எனவும் இவ்வழக்குக் குறித்துச் செய்திகள் கிடைத்துள்ளது.
அதிகாரிகளும் நிறுவனங்களும்
கிரிமினல் வழக்கு
ஊழல்
சோதனை
16 மண்டல விசாரணை
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications