பெங்களூரு: எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அளவைக் குறைக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில். சந்தையின் தேவைக்கு அதிகமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்யப்படுவதால் தொடர்ந்து விலை குறைந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 7 வருடச் சரிவை எட்டியதால் அமெரிக்கக் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 34.73 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதனால் அமெரிக்கப் பங்குக்சந்தையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் டாவ் ஜோன்ஸ் சந்தை 2.1 சதவீதம் வரை சரிந்தது.
மேலும் கச்சா எண்ணெய் விலை சரிவினால் எஸ் அண்டி பி சந்தையில் 1.5 சதவீத சரிவை சந்தித்தது.

இந்த நிலையை மேலும் மோசம் அடையச் செய்யப் பெடர்ல் ரிசர்வ் அறிவித்த வட்டி உயர்வு அமெரிக்கச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்கச் சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளும் அதிகளவிலான சரிவை சந்தித்து வருகிறது.


Click it and Unblock the Notifications