டெல்லி: மத்திய அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய வாடிக்கையாளர் அதிகரிக்க மொபைல் கட்டணங்களில் 80 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
இனி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர்களுக்கு முதல் 2 மாதங்களுக்கான கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் அடுத்தச் சில மாதங்களில் இந்நிறுவனத்தில் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மறுசீரமைப்புத் திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், புதிய வாடிக்கையாளர்களின் சேவைக்கு முதல் 2 மாதத்திற்கு மொபைல் கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்க முடிவு செய்துள்ளோம் எனப் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

குறிப்பாக நிமிடத்திற்கான ரேட் கட்டர் 36 ரூபாய்க்கும் நொடிகளுக்கான ரேட் கட்டர் 37 ரூபாய்க்கும் அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
36 ரூபாய் ரேட் கட்டரில் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களுக்கு 1 நிமிடத்திற்கு 10 பைசாவும், அதேபோல் 37 ரூபாய் ரேட் கட்டரில் நிமிடத்திற்கு 30 பைசா வசூல் செய்யப் பிஎஸ்என்எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் 36 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் லோக்கல் மற்றும் எஸ்டிடி பிஎஸ்என்எல் நெட்வொர்க் கால்களுக்கு 3 நொடிகளுக்கு 1 பைசாவும், பிற நெட்வொர்க்களில் 3 நொடிகளுக்கு 2 பைசா வசூல் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎஸ்என்எல் நிர்வாகம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications