டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு படும்பாட்டை விவரிக்க முடியாத நிலையில், 2015ஆம் ஆண்டில் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கச் சந்தைகளின் வீழ்ச்சி இந்திய சந்தையை மிகப்பெரிய அளவில் பாதித்தது.
மேலும் பருவ மழை பாதிப்பால் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை, விலை மற்றும் பணவீக்கம் இந்திய பொருளாதாரத்தை அதிகளவில் பாதித்தது.
இந்நிலையில் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 15க்கும் அதிகமான துறைகளில் செய்த அன்னிய முதலீட்டுத் தளர்வுகளைப் பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
பாதுகாப்புத் துறை..
2015ஆம் ஆண்டில் மத்திய அரசு வளர்ச்சி அடைய வேண்டும் என மிக முக்கியமாகக் கருதிய துறைகளுள் பாதுகாப்புத் துறை மிக முக்கியமானது.
ஆகையால் 2015ஆம் ஆண்டில் பாதுகாப்புத் துறையில் 49 சதவீதம் வரையிலான அன்னிய முதலீட்டைப் பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்டோமேடிக் முறையில் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.
49 சதவீதத்திற்கும் அதிகமாக முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் FIPB அமைப்பின் அனுமதி பெற்ற பின் முதலீடு செய்யலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு ஒப்புதல்
49 சதவீத அன்னிய முதலீட்டில் இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாகச் சுமார் துப்பாக்கிகள், ராணுவ உபகரணம், போர்க் கப்பல் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காகக் கடந்த ஒரு வருடத்தில் 20க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்களது வர்த்தகம் மற்றும் உற்பத்தியைத் துவங்க ஆர்வம் காட்டியுள்ளது.
மேலும் அன்னிய முதலீடு செய்யப்பட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனத்தின் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்குக் கண்டிப்பாக நிறுவனம் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
ரயில்வே துறை
பிபிபி (public private partnership) வாயிலான புறநகர் கட்டிடத்திற்குத் திட்டங்கள், அதிவேக ரயில்கள், சரக்கு ரயில் வழித்தடங்கள், ரயில் பெட்டி தயாரிப்பு, உற்பத்தி மற்றும் மேலாண்மை, ரயில்வே மின்மயமாக்கல், சமிக்ஞை அமைப்புகள், சரக்கு முனையங்கள், பயணிகள் முனையங்கள், போக்குவரத்து முறை ஆகியவற்றில் மத்திய அரசு ஆட்டோமேடிக் வாயிலான அன்னிய முதலீட்டுக்கு 100 சதவீதம் வரை ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் தாத்தா காலத்து ரயில்வே துறை மற்றும் அதன் முறைகள் புதிய பரிமாண வளர்ச்சியை அடையும்.
கட்டுமானத் துறை
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய அன்னிய முதலீட்டுத் திட்ட மாற்றங்களில், கட்டுமானத் துறையில் முதலீடு செய்ய இந்திய சந்தைக்கும் வரும் அன்னிய நிறுவனங்களின் திட்டம் குறைந்தது 20,000 சதுரடி பரப்பளவு இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்ட வட்டமாக அறிவித்துள்ளது. இதனால் சிறு அளவிலான திட்டங்கள் இந்திய நிறுவனங்களால் எளிமையாகக் கையாளப்படும்.
மேலும் திட்ட ஒப்புதலுக்குப் பிறகு நிறுவனங்கள் இந்திய சந்தைக்குள் 6 மாதத்திற்குள் குறைந்தது 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது.
வாடகை அல்லது குத்தகை பணம்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் தங்களது சொத்துக்களின் மூலம் கிடைக்கப்படும் வாடகை அல்லது குத்தகை பணத்தை அன்னிய முதலீட்டு வாயிலாகப் பரிமாற்றம் செய்வது ரத்துச் செய்யப்பட்டது.
100% அன்னிய முதலீடு
இந்தியாவில் கட்டப்பட்டுள்ள டவுன்ஷிப், மால் அல்லது ஷாப்பிங் காம்பிளக்ஸ் மற்றும் வர்த்தக மையங்களின் செயல்பாடு மற்றும் மேம்பாட்டிற்காக முதலீடு செய்யப்படும் தொகையை அன்னிய முதலீடு வழியாக 100% வரை ஆட்டோமேட்டிக் வாயிலாகக் கொண்டு வரலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கட்டுமானத் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டை வெளியேற்ற விரும்பினாலோ அல்லது தனது பங்கை விற்க விரும்பினாலோ 3 வருடம் லாக்-இன் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
100% அன்னிய முதலீடு
பிராட்காஸ்டிங் துறைக்கான அன்னிய முதலீட்டு அளவுகளை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை அனுமதிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் டெலிபோர்ட்ஸ், DTH, கேபில் நெட்வொர்க், Headend-In-The-Sky மற்றும் மொபைல் டிவி ஆகிய துறையில் 100% வரை அன்னிய முதலீடு செய்யலாம்.
செய்தி சேனல்கள்
மேலும் செய்தி மற்றும் அரசு குறித்துத் தொடர் செய்திகளை வெளியிடும் டிவி சேனஸ்களிலும் அன்னிய முதலீட்டு அளவுகளை 100 சதவீதம் வரை அனுமதி அளித்துள்ளது.
எப்எம் ரேடியோ மற்றும் அப்-லீங்
அதுமட்டும் அல்லாமல் எப்எம் ரேடியோ மற்றும் அப்-லீங் சேனல்கள் அமைக்க 49 சதவீதம் வரை அன்னிய முதலீட்டை அனுமதி அளித்துள்ளது.
இவை அனைத்திற்கும் 49 சதவீதம் வரை ஆட்டோமேடிக் வாயிலாகவும், 49 சதவீதத்திற்கு அதிகமாக முதலீடு செய்ய விரும்பு பன்னாட்டு நிறுவனங்கள் மத்திய அரசின் ஒப்புதல்களுடன் முதலீடு செய்யவும் வாய்ப்புகளை வகுத்துள்ளது மத்திய அரசு.
இன்சூரன்ஸ்
நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் அட்டோமேடிக் வாயிலான அன்னிய முதலீட்டு அளவுகள் 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பார்மா துறை
இந்தியாவில் மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைத் தயாரிப்பதில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு 100 சதவீதம் வரையில் ஆட்டோமேடிக் வாயிலாக அன்னிய முதலீடு செய்ய அனுமதி அளித்துள்ளது.
வங்கித் துறை
தனியார் துறை வங்கிகளில் இனி எப்ஐஐ, எப்பிஐ, க்யூஎப்ஐ மூலம் 74 சதவீதம் வரை அன்னிய முதலீடு பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
செயற்கைக்கோள்
இந்தியாவில் செயற்கைக்கோள் வடிவமைப்பு மற்றும் இயக்கத்தில் மத்திய அரசு தனது அன்னிய முதலீட்டு அளவுகளை 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து
பிராந்திய விமானப் போக்குவரத்தில் 49 சதவீத அன்னிய முதலீடும், பிற பரிவுகளில் 100 சதவீத அன்னிய முதலீடும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் இந்தியாவில் அடுத்தச் சில வருடங்களில் சிவில் விமானப் போக்குவரத்து புதிய பரிமாண வளர்ச்சியை அடைய உள்ளது.
சிங்கிள் பிராண்டு ரிடைல் டிரேடிங் (SBRT)
மொத்த வர்த்தகத்தில் 30 சதவீத பொருட்களை முதல் கிளை திறக்கும் போது கொள்முதல் செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டுடன் இந்தியாவில் சிங்கிள் பிராண்டு ரிடைல் டிரேடிங் நிறுவனங்களுக்கு வர்த்தகம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ஈகார்மஸ்
சிங்கிள் பிராண்டு ரிடைல் டிரேடிங் நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகையாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் துறையில் பங்குபெறவும் ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.
இந்திய பிராண்ட்கள்
இந்திய பிராண்ட் நிறுவனங்களுக்கு இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் வர்த்தகம் செய்ய அன்னிய முதலீட்டில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய பிராண்ட்கள் ஈகாமர்ஸ் துறையில் சில்லறையாகவும் மொத்தமாகவும் வர்த்தகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டியூட்டி ஃப்ரீ ஷாப்
மேலும் Duty Free கடைகளை அமைக்க மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரை ஆட்டோமேடிக் முறையிலான அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட துறை
இந்தியாவில் காபி, ரப்பர், ஏலக்காய், பாம் ஆயில் மரம் மற்றும் ஆலிவ் எண்ணெய் மரம் வளர்ப்புத் துறையில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் வரையில் முதலீடு செய்யலாம் என அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் இருத்து காபி, ரப்பர், ஏலக்காய், பாம் ஆயில் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்புகள் உருவாகும்.
அருண் ஜேட்லி
மத்திய அரசு அறிவித்த அன்னிய முதலீடு தளர்வுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறுகையில், பன்னாட்டுச் சந்தைகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ள போது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றச் சூழ்நிலைகள் அமைந்துள்ள இத்தருணத்தில் அன்னிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வுகள் தேவை எனத் தெரிவித்தார்.
47 அன்னிய முதலீட்டுத் திட்டங்கள்
2015ஆம் ஆண்டில் மத்திய அரசு சுமார் 47 திட்டங்களில் 13,860.8 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8 சதவீத வளர்ச்சி
2015ஆம் அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்தாலும், மத்திய அரசு 2015-16 நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்தப்படி 8-8.5 சதவீத இலக்கை எட்ட முடியாது என பல வர்த்தக அமைப்புகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இதனை ஒருமனதாக மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.
பிற செய்திகள்
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications