மும்பை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.35,000 கோடி நிதியை மத்திய அரசு திரட்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் ஓ.என்.ஜி.சி. என்.டி.பி.சி. மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களில் பங்குகளைப் பங்குவிலக்கலை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு 2015 நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் 35,236 கோடி ரூபாயும், 2014ஆம் நிதியாண்டில் 18,000 கோடி ரூபாயும், 201ஆம் ஆண்டில் 22,000 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டில் இதன் குறைந்தபட்ச அளவு 50,000 கோடி ரூபாயாக இருக்கும் என மத்திய அரசு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

2016-ம் ஆண்டில் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யத் தயாராக உள்ளது எனப் பங்குவிலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலக் கட்டத்தில் கோல் இந்தியா, என்டிபிசி, பிஹெச்இஎல் மற்றும் என்எம்டிசி ஆகிய நிறுவனங்களில் பங்குவிலக்கலை மேற்கொள்ள உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications