மும்பை: இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்தைச் சிறப்பான முறையில் கொண்டு செய்ய மத்திய அரசு ஸ்டார்ட்-அப் இந்தியா என்னும் திட்டத்தை உருவாக்கியது.
இந்நிலையில் இந்தியாவில் துவங்கப்படும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அதிகளவிலான நிதியுதவி வெளிநாடுகளில் இருந்து முதலீட்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாணய பரிமாற்றம் மற்றும் அதன் சார்ந்த மேலாண்மை சந்தேகங்களை எளிமையாகத் தீர்க்க ரிசர்வ் வங்கி பிரத்தியேகமாக ஹெல்ப்-லைன் ஒன்றை நிறுவியுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
இந்தியாவில் துவங்கப்படும் பெரும்பாலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் நிறுவனங்கள் இளைஞர்கள் மற்றும் வர்த்தகம் குறித்த முன் அனுபவம் இல்லாதவர்கள் மூலமே துவங்கப்படுகிறது.
ஆயினும் இவர்கள் துவங்கும் நிறுவனங்களுக்குக் கிடைக்கப்பெறும் முதலீடு பல மில்லியன் டாலராக உள்ளது.
ரிசர்வ் வங்கி
இத்தகைய பெரும் தொகையை இந்திய சந்தைக்குள் சரியான முறையில் கொண்டுவரவும், பின் நாளில் நிறுவனத்திற்கு எவ்விதமான நிதி சார்ந்த பிரச்சனைகள் கொண்டு வந்து சேர்க்காமல் இருக்க ரிசர்வ் வங்கி புதிய ஹெல்ப்-லைன் ஒன்றை நிறுவியுள்ளது.
ஹெல்ப்-லைன்
ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ள ஹெல்ப்-லைன் மின்னஞ்சல் வடிவில் செயல்பட உள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சந்தேகங்களைத் தெரிவித்தால் ரிசர்வ் வங்கி விரைவில் உங்களது சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் செயல்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
மத்திய அரசு
2015ஆம் ஆண்டுச் சுதந்திர உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஸ்டார்ட்-அப் திட்டம் குறித்து அறிவித்தார்.
இதன் பின் ஸ்டார்ட்அப் நிறுவனம் குறித்து அதன் வடிவம், செயல்முறை மற்றும் இயக்கும் குறித்துப் பல்வேறு தகவல்களைச் சாப்ட்பேங்க் நிகேஷ் அரோரா, ஸ்னாப்டீல் குனால் பஹல் மற்றும் இன்போசிஸ் மோகன்தாஸ் பாய் அவர்களிடம் பெற்று.
தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை Foreign Exchange Management Act சட்டத்தில் புதிய மாற்றங்களை அறிவித்தது.


Click it and Unblock the Notifications