மும்பை: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியாகத் திகழும் ஐசிஐசிஐ வங்கி, தனது, வங்கி இணையதளம் வாயிலாகத் தனது வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் ரயில்வே டிக்கெட்களை முன்பதிவு செய்யும் சேவையைத் துவங்கியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு சேவைக்காக ஒரு வங்கி (ஐசிஐசிஐ வங்கி) ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது இதுவே முதல் முறை.

ஆன்லைன் டிஜிட்டல் வங்கி சேவை, பணப் பரிமாற்றம், மற்றும் பேமென்டு சேவைகளில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வரும் ஐசிஐசிஐ வங்கி தற்போது ஒரு படி மேலாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பிற வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் இந்திய ரயில்வே துறையின் ரயில் முன்பதிவு சேவையை அளிக்க உள்ளோம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.
இச்சேவையைப் பயன்படுத்த முதலில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இணையதளத்திலும் ஒரு முறை பதிவு செய்து கொள்ள வேண்டும். (ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர் மட்டுமல்லாது, மற்ற வங்கி வாடிக்கையாளர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.) முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இணையவழி வங்கி வசதி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வகையில் இச்சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யவும், பிஎன்ஆர் குறித்த விபரங்களை அறியவும், ரயில்கள் குறித்து முழுமையான தகவல்கள் இந்த முன்பதிவு பக்கத்தில் உள்ளதாக ஐசிஐசிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிக்கெட் விற்பனை தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் பல்வேறு சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications