மும்பை: சமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் இந்திய சந்தையில் இருக்கும் பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான முதலீட்டில் அதிவேக 4ஜி அலைக்கற்றைக் கைப்பற்றியது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய அளவிலான அறிமுகத்தின் காரணமாகச் சந்தையில் உள்ள பிற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைப் பெற அவசர அவசரமாகத் தங்களது 4ஜி சேவையை அறிமுகம் செய்து வருகின்றனர்.
ஏர்டெல்
சில மாதங்களுக்கு முன் நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல் இந்தியாவில் முதன் முதலாக 4ஜி சேவையை அறிமுகம் செய்தி விளம்பரங்கள் மூலம் நம் செவிகளைக் கிழித்து வருகிறது.
வோடாபோன்
ஏர்டெல் நிறுவனம் மேற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வோடாபோன் நிறுவனம் தனது 4ஜி சேவையைத் தென் இந்திய பகுதியில் கொச்சியைத் தொடர்ந்து பல இடங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேவை அறிமுகம் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்தக் கால இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஐடியா செல்லுலார் திட்டமிட்டுள்ளது.
5 மாநிலங்கள்
வோடாபோன் நிறுவனத்தைப் போல் தென் இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சுமார் 75 டவுன்களுக்கு ஆதித்தியா பிர்லா நுவோ குழுமத்தின் நிறுவனமான ஐடியா செல்லுலார் தனது 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
2 மற்றும் 3 தர நகரங்கள்
ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் திட்டங்களின் படி இந்தியாவில் 2 மற்றும் 3 தர நகரங்களில் அதிகளவில் கவனத்தைச் செலுத்தி வாடிக்கையாளர்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது.
குறைந்த விலை கட்டணம்
அறிமுகச் சலுகை மற்றும் குறைந்த விலை கட்டணமாக ஐடியா செல்லுலார் தனது 4ஜி சேவையை வெறும் 29 ரூபாய்க்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
750 டவுன்கள்
மேலும் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் மார்ச் மாத அறிமுகத்திற்குள் ஐடியா செல்லுலார் நிறுவனம் இந்தியாவில் சுமார் 750 டவுன்களுக்குத் தனது அதிவேக 4ஜி சேவையைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications