பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ, அமெரிக்காவைச் சேர்ந்த BPaaS துறையில் ஈடுபட்டுள்ள விடியோஸ் குழும நிறுவனத்தைச் சுமார் 13 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றியுள்ளது.
வர்த்தகச் செயல் இயக்கச் சேவை என்னும் பிபிஎஸ் துறையில் சிறந்து விளங்கவும், இத்துறையில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் விப்ரோ இந்த அமெரிக்க நிறுவனத்தை வாங்க உள்ளது.
2003-ம் ஆண்டில் நியூஜெர்ஸியில் துவங்கப்பட்ட விடியோஸ் குழுமம் இந்த நிறுவன கைப்பற்றும் பணியில் பங்கு பரிவர்த்தனை சார்ந்த பணிகளை மேற்கொள்கிறது. பங்கு விற்பனைக்குப் பிந்தைய நடவடிக்கைகளை விப்ரோ நிறுவனம் மேற்கொள்வதாக இரு நிறுவனங்கள் மத்தியில் நடந்த ஒப்பந்த பத்திரம் தெரிவிக்கிறது. அக்கவுன்டிங் சேவை உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றும் விடியோஸ் குழும நிறுவனத்தில் 400 பணியாளர்கள் உள்ளனர்.இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையானது பங்குச் சந்தை ஒப்புதலுக்குப் பிறகு நிறைவேறும் எனத் தெரிகிறது. அதாவது மார்ச் 2016-க்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும். விடியோஸ் நிறுவனம் அதே பெயரில் தொடர்ந்து தனது பணிகளை நிறைவேற்றும். இதற்குப் பின்புலமாக விப்ரோ நிறுவனம் இருக்கும். அதேபோல நிறுவனத்தின் நிர்வாகவியல் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் நீடிப்பர் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
விடியோஸ் குழுமம்
400 பணியாளர்கள்
விப்ரோ
ஒடிசா மாநிலம்
விப்ரோ நிறுவன பங்குகள்
சமுக வலைத்தள இணைப்புகள்


Click it and Unblock the Notifications