இன்சூரன்ஸ் திட்டத்திற்காக அதிகப் பிரீமியம் செலுத்துபவரா நீங்கள்..?

சென்னை: நீங்கள் சரியாகக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும், நீங்களும் உங்கள் நண்பரும் ஒரே சமயத்தில் ஒரே மாறியான இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்கி இருந்தாலும், அவரது பிரீமியம் தொகை அதாவது தவணைதொகையின் அளவு உங்களை விடக் குறைவாக இருக்கும். ஏன் இப்படி..?

குழப்பம் வேண்டாம், உங்கள் குழப்பத்தைத் தீர்க்கவே இந்தச் சிறப்புக் கட்டுரை..

BHARTI AXA LIFE INVEST ONCE

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

உங்களுக்கான பிரீமியம் தொகை கணக்கிடுவதில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல காரணிகளைக் கணக்கில் கொண்டு தொகையைத் தீர்மானம் செய்கிறது. எனவே தான் உங்களுக்கும் உங்கள் நண்பரின் பிரீமியம் தொகை மாறுபடுகிறது.

சரி அப்படி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எதைக் கொண்டு தான் தவணைத் தொகையைக் கணக்கிடுகின்றனர்.

 

வயது

வயது

உங்களுடைய வயது தான் முதல் மற்றும் அதிமுக்கிய காரணியாகும். ஏனென்றால் 25 வயதுடைய ஒவருவருக்கு மிகப்பெரிய அளவிலான வியாதிகள் இருக்காது, அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். இந்நிலையில் 35 வயதுடைய ஒருவருக்கு நோய் பாதிப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம். இத்தகைய பாதிப்பால் சிலருக்கும் மரணம் கூட ஏற்படலாம்.

இந்நிலையில் 25 வயதுடையவர் குறைந்த அளவிலான பிரீமியமும், 35 வயதுடையவர் அதிகப் பிரீமியம் தொகையும் செலுத்தும் வகையில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்களது திட்டங்களை வடிவமைக்கும்.

 

பாலினம்

பாலினம்

அறிவியல் ரீதியாகப் பெண்கள் அதிகக் காலம் வாழ்வார்கள், அதனால் பெண்களுக்கான ஈவுத்தொகை குறைவாக இருக்கும். அதேபோல் வாழ்க்கை முறையில் பெண்களை விடவும் ஆண்களுக்கு அதிகளவிலான பாதிப்புகள் உள்ள காரணத்தாலும் தவணைத் தொகை குறைவாக இருக்கும்.

இதனால் உங்கள் பாலினம் சார்ந்தும் பிரீமியம் தொகை மாறுபடும்.

 

பழக்கவழக்கம்

பழக்கவழக்கம்

மேலும் புகை மற்றும் குடி பழக்கம் கொண்டவர்களுக்கு அதிகப் பிரீமியம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏனெனில் அவர்களின் வாழ்

குடும்ப மருத்துவ வரலாறு

குடும்ப மருத்துவ வரலாறு

மேலும் பாலிசிதாரரின் குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய், அல்சைமர், இருதய நோய் மற்றும் கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் பாலிசிதாரரின் தவணைத்தொகை அதிகரிக்கும். இதற்கான தகவல்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உறுதிசெய்துகொள்ளும். தேவைப்பட்டால் மருத்துவப் பரிசோனைகளும் செய்யத் தூண்டும்.

உடல் நலம்..

உடல் நலம்..

பாலிசிதாரரின் தற்போதைய உடல்நலம் குறித்தும் மருத்துவப் பரிசோனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வலியுறுத்தும். இதில் பாலிசிதாரர் அவர்களின் எடை, உயரம், இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மற்றும் வைடமின் குறைபாடுகள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு அதற்கு ஏற்றபடி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தவணைத்தொகையில் மாற்றத்தை அறிவிக்கும்.

உங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்கள்..

உங்கள் வாழ்க்கையின் ஆபத்துக்கள்..

நீங்கள் ஆபத்து நிறைந்த தொழில் அல்லது வேலை செய்பவராக இருந்தால் கூட உங்களுக்கான பிரீமியம் தொகை அதிகமாக வசூல் செய்யப்படும். குறிப்பாக ஸ்கை டைவிங், டீப் சீ டைவிங், மலையேறுதல், தீயணைப்பு வீரர்கள், பைலட் போன்ற பணிகளில் வேலைசெய்வோர்.

இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

இன்சூரன்ஸ் திட்டங்களின் வகைகள்

கடைசியாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் திட்டங்கள் சார்ந்தும் உங்களின் பிரீமியம் தொகை மாறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+