மும்பை: சர்வதேச சந்தையில் டாலரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரே நாளில் 13 பைசா வரை குறைந்துள்ளது.
டிசம்பர் மாத இறுதியை எட்டியுள்ள நிலையில் வங்கி பரிமாற்றம் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலர் தேவை அதிகரித்துள்ளது. அதேபோல் அமெரிக்கச் சந்தை தனது வட்டி உயர்வு பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதாலும், விழாக்காலம் என்பதாலும் சந்தையைப் பாதிக்கும் வகையில் எவ்விதமான வர்த்தகமும் நடைபெறவில்லை, இத்தகைய காரணங்களால் அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் 2 பைசா மட்டுமே சரிந்து 66.19 ரூபாய் என்ற நிலையில் முடிந்த டாலர்- ரூபாய் நாணய பரிமாற்றம், இன்று 13 பைசா வரை சரிந்து 66.32 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த 8 நாள் வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 1.34 சதவீதம் அல்லது 90 பைசா உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 17.67 புள்ளிகள் சரிந்து 26,016.46 புள்ளிகளாக உள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 12.65 புள்ளிகள் சரிந்து 7,911.50 புள்ளிகளாக உள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications