சென்னை: 2015ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கத்தின் உயர்வு ஒரு பக்கம் பொருளாதாரத்தைப் பாதித்தாலும், மறுபக்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளின் விலைவாசி தாறுமாறாக உயர்த்தியது.
அதிலும் முக்கியமாகத் தக்காளி, வெங்காயம், பருப்பு வகைகளின் விலைகளின் நிலை சொல்லவே வேண்டாம். இதனைச் சரி செய்ய மத்திய அரசு பல நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ததும் நிலை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் பணவீக்கத்தின் கோரத் தாண்டவத்தைப் பார்ப்போம் வாங்க.

மொத்த விலை பணவீக்கம்
கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் தாறுமாறாகக் குறைந்ததுள்ளது. 2013-14ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் 2014-15ஆம் ஆண்டில் 2.0 சதவீதமாகக் குறைந்தது. இதன்பின் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எதிர்மறை பணவீக்கத்தில் -3.5 சதவீதமாகக் குறைந்தது.
2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு எதிர்மறை பணவீக்கத்தில் இருந்த நிலையில், 2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இதன் அளவு -3.8 சதவீதமாகக் குறைந்தது.

இந்நிலையில் மொத்த விலை பணவீக்கத்தில் உணவு பணவீக்கத்தின் அளவு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6.0 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதம் 1.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எரிபொருள் மற்றும் பவர் துறையின் பணவீக்கத்தின் அளவு நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் -16.3 சதவீதமாகவும், ஜனவரி மாதத்தில் -11.0 சதவீதமாகவும் இருந்தது.
உற்பத்தி பொருட்கள் மீதான பணத்தின் அளவு 2015ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் -1.7 சதவீதமாகக் குறைந்தது. ஜனவரி மாதத்தில் இதன் அளவு 1.0 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சில்லறை விலை பணவீக்கம்
நாட்டின் சில்லறை பணவீக்கம் 9.5 (2013-14 ஆண்டு) சதவீதத்தில் இருந்து 2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் 5.9 சதவீதமாகக் குறைந்தது. இதன் பின் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இதன் அளவு 5.5 சதவீதம் என்ற நிலையிலான அளவைப் பெற்றது.

2015-16ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் காலகட்டத்தில் சராசரி சில்லறை பணவீக்கத்தின் அளவு 4.7 சதவீதமாக இருந்தது. 2015ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் இதன் அளவு 5.0 சதவீதமாக இருந்தது.
சில்லறை பணவீக்கத்தில் உணவு பணவீக்கம் 6.9 சதவீதத்தில் இருந்து அக்டோபர் மாதம் 5.2 சதவீதமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
தொழில்துறை ஊழியர்களின் பணவீக்கத்தைப் பார்க்கும் போது செப்டம்பர் மாதம் இதன் அளவு 5.1 சதவீதமாகக் குறைந்தது, ஜனவரி மாதத்தில் இதன் அளவு 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications