வரி ஏய்ப்பு செய்த 18 தொழிலதிபர் பெயர்கள் பகிரங்கம்.. வருமான வரித்துறை அதிரடி..!

டெல்லி: வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்புச் செய்தவர்களை அவமானம் படுத்தும் வகையில் மூன்றாவது முறையாகப் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இம்முறை ரூ.1,150 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்த 18 பேரின் பெயர்களை வருமான வரித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு..

ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு..

வருமான வரித்துறை இந்தியாவில் வரி ஏய்ப்பு நடவடிக்கையைக் கண்டிப்பான முறையில் தடுக்கும் வகையில் இதற்குமுன் 2 முறை தனது இணையத் தளத்தில் 49 பெயர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

இந்த 2 முந்தைய அறிவிப்புகளில் சுமார் ரூ.2,000 கோடி வரை வரி ஏய்ப்புச் செய்தவர்கள் பெயர்கள் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

என்ன கொடுமை சார் இது..

என்ன கொடுமை சார் இது..

இந்நிலையில் வரி ஏய்ப்புச் செய்தவர்கள் என்று வருமான வரித்துறை வெளியிட்ட பெயர் பட்டியலைப் பார்க்கும் போது இவர்களை ஒன்று கண்டுபிடிக்க முடியவில்லை அல்லது வரி செலுத்த போதிய சொத்துக்கள் இல்லாமல் உள்ளனர் என்று வருமான வரித்துறையின் பொது அறிவிப்பு நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

இணையதளம்

இணையதளம்

இப்பட்டியலை வருமான வரித்துறை தயாரித்து அதை நிதியமைச்சகம் ஒப்புதலின் படி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

மும்பை தொழிலதிபர்

மும்பை தொழிலதிபர்

இம்முறை வெளியிடப்பட்ட பட்டியலில் அதிகபட்சமாக மும்பையைச் சேர்ந்த உதய் எம்.ஆச்சாரியா (லேட்) மற்றும் இவரது வாரிசுகள் அமுல் ஆச்சாரியா மற்றும் பவன ஆச்சாரியா ஆகியோர் சுமார் ரூ.779.04 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இவர்கள் உடனடியாக வரி நிலுவைத் தொகையைச் செலுத்த வருமான வரித்துறை எச்சரித்ததோடு, இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்குமாறு பொது அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழில் நிறுவனங்களை 2 பாகங்களாகப் பரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்ட் 1

பார்ட் 1

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜக் ஹீத் ஏற்றுமதி நிறுவனம் (ரூ.18.45 கோடி வரி ஏய்ப்பு), ஜஷுபாய் ஜுவல்லர்ஸ் (ரூ.32.13 கோடி), கல்யாண் ஜுவல்ஸ் (பி) லிட். (ரூ.16.77 கோடி), லிவர்பூல் ரீடெய்ல் இந்தியா லிமிடட் (ரூ.32.16 கோடி), தர்னேந்திரா ஓவர்சீஸ் லிமிடட் (ரூ.19.87 கோடி), பிரபுல் அக்கானி (ரூ.29.11 கோடி), ஹைதராபாத்தைச் சேர்ந்த நெக்ஸாஃப்ட் இன்போடெல் (ரூ.68.21 கோடி), போபாலைச் சேர்ந்த கிரேட் மெட்டல்ஸ் நிறுவனம் (ரூ.13.01 கோடி).

பார்ட் 2

பார்ட் 2

சூரத்தைச் சேர்ந்த சாக்‌ஷி ஏற்றுமதி நிறுவனம் (ரூ.26.76 கோடி), டெல்லி கரோல்பாக்கைச் சேர்ந்த ஸ்ரீமதி பிம்லா குப்தா (ரூ.13.96 கோடி), போபாலைச் சேர்ந்த கேரிமா மெஷினரி (ரூ.6.98 கோடி), மும்பையைச் சேர்ந்த திரன் அனந்த்ராய் மோடி (ரூ.10.33 கோடி), ஹேமங் ஷா (ரூ.22.51 கோடி), மொகமது ஹாஜி என்கிற யூசுப் மோட்டார்வாலா (ரூ.22.34 கோடி), சண்டிகரில் உள்ள வீனஸ் ரெமடீஸ் (ரூ.15.25 கோடி).

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+