மும்பை: நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழும நிறுவனங்களில் மிக முக்கியமான டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மீது தீராத காதல் கொண்டுள்ளார்.
இவரின் காதலை வெளிப்படுத்தும் விதமாக இதுவரை 19 நிறுவனத்தின் தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் வாயிலாக முதலீடு செய்து அசத்தியுள்ளார்.
இந்நிலையில் 2016ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே செல்லப் பிராணிகளின் பராமரிப்புக்கான பிரத்தியேகமாக இயக்கும் டாக்ஸ்பாட். இன் என்னும் நிறுவனத்தில் குறிப்பிடப்படாத தொகையை 20வது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
ஸ்டார்ட்-அப்
இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவன கலாச்சாரம் மிகவும் வேகமாகவும் வலிமையாகவும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீட்டைப் பார்க்கும் போதும் ஆச்சரியப்படும் அளவிற்கு உள்ளது.
கடந்த சில வருடங்களைப் பார்க்கும் போது இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மீது எப்போதும் இல்லாத வகையில் அளவிற்குச் சுமார் 5.4 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு வெளியிட்டுள்ள ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் தான்.
ரத்தன் டாடா
இத்தகைய லாபகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்ட ரத்தன் டாடா ஸ்டார்ட்-அப் மீதான அளவு கடந்த நம்பிக்கையில் தொடர்ந்த முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் 2016ஆம் ஆண்டுத் துவங்கி சில நாட்களே ஆன நிலையில் டாக்ஸ்பாட். இன் என்னும் நிறுவனத்தில் தனது தனிப்பட்ட முதலீட்டு நிறுவனத்தின் மூலம் முதலீடு செய்துள்ளார்.
மேலும் இந்தச் செய்தி அதிகாரப்பூர்வமாக இரு நிறுவனங்களும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸ்பாட். இன்
இந்நிறுவனம் இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ரானா அதேயா என்பவர் மூலம் துவங்கப்பட்டது. இவரது பிரிட்டன் நாட்டின் கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.
இவரது டாக்ஸ்பாட்.இன் நிறுவனத்தின் இந்தியா கோஷியன்ட் மற்றும் கே.கனேஷ் உடன் இணைந்து ரோனி ஸ்கூருவால்-வும் முதலீடு செய்துள்ளார்.
100 பில்லியன் டாலர் சந்தை
உலகளவிலான செல்ல பிராணிகளின் பராமரிப்பு சந்தை 2014ஆம் ஆண்டு 100 பில்லியன் டாலரை எட்டியுள்ள நிலையில் இந்தியா இச்சந்தைச் சற்று மந்தமாகவே உள்ளது. இதேபோல் அமெரிக்காவில் இச்சந்தையில் மொத்த மதிப்பு 58 பில்லியன் டாலர்.
இந்தியாவில் செல்ல பிராணிகளின் பராமரிப்பு சந்தை ஒவ்வொரு வருடமும் 35 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு முடிவில் இச்சந்தையின் மொத்த மதிப்பு 1.22 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது தான் ஸ்டார்ட்-அப்
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பற்றிய முக்கிய செய்திகளை அறிந்துக்கொள்ள இதை மட்டும் கிளிக் பண்ணுங்க போதும்.
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications