பெங்களூரு: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமாகத் திகழும் விப்ரோ நிறுவனத்தின் புதிய சீஇஓ-வாக அபித் அலி நீமச்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
அபித் அலி நீமச்வாலா
கடந்த 5 வருடமாக இப்பதவியில் இருந்த டி.கே குரியன், தற்போது அசிம் பிரேம்ஜி-யின் உத்திரவின் படி விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையால் தற்போது டி.கே குரியன் இடத்தை அபித் அலி நீமச்வாலா பிடித்துள்ளார்.
பிப்ரவரி முதல்
இவர்கள் இருவரின் பணி வருகிற பிப்.1ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டி.கே குரியன்
மேலும் டி.கே குரியன் விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் வருகிற மார்ச் 31,2017ஆம் ஆண்டு வரை இருப்பார் எனவும் விப்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விப்ரோ நிறுவனத்தில் பல வருடங்களுக்குப் பின் உயர் மட்ட நிர்வாகத்தில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அசிம் பிரேம்ஜி
விப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவராக இனி டி.கே குரியன், அபித் அலி நீமச்வாலா மூலம் வாடிக்கையாளர் மற்றும் புதிய தொழில்நுட்பம் வளர்ச்சியில் புதிய பாதை அமைப்பார் என இந்நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தெரிவித்தார்.
9 மாத பணி
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அபித் அலி நீமச்வாலா விப்ரோ நிறுவனத்தில் கடந்த 9 மாத நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications