பெங்களூரு: உலகின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் டெல், தனது ஐடி மேனேஜ்மென்ட் வர்த்தக நிறுவனமான பெராட் சிஸ்டம்ஸ் வர்த்தகத்தை முழுமையாக விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதனைக் கைப்பற்ற டிசிஎஸ், சிடிஎஸ் உட்பட நான்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.
ஒரு வருடப் போராட்டம்..
கடந்த ஒரு வருடமாக டிசிஎஸ் நிறுவனம், டெல் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்ற பல முயற்சிகள் செய்தது. ஆனால் டெல் நிறுவனம் எவ்விதமான பதில்களும் அளிக்கவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை டிசிஎஸ் நிறுவனம் மீண்டும் டெல் நிறுவனத்தை அணுகியபோது. பெராட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கான தொகையை டெல் அறிவித்தது.
இதனால் ஐடி சந்தையில் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற புதிய போட்டி உருவாகியுள்ளது.
5 பில்லியன் டாலர்
பெராட் நிறுவனத்தை விற்பனை செய்ய 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை டெல் நிறுவனம் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த நிறுவனம் அதிகமான தொகையை அளிக்கிறதோ, அவர்களுக்கு (ஏல முறையில்)பெராட் நிறுவனம் என்ற மனநிலையில் டெல் கூறியுள்ளது.
போட்டி
பெராட் நிறுவனத்தைக் கைப்பற்ற டிசஎஸ், காக்னிசென்ட் டெக்னாலஜிஸ், என்டிடி டேட்டா கார்ப் மற்றும் அட்டாஸ் எஸ்ஈ ஆகிய நிறுவனங்கள் தற்போதைய போட்டியில் உள்ளது.
பெராட் நிறுவனம்
மருத்துவமனை மற்றும் அரசுத் துறைகளுக்கு ஐடி சேவை வழங்கும் இந்த நிறுவனத்தை 1988ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளரான ராஸ் பெராட் துவக்கி வைத்தார். இதன் பின் 2009ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை 3.9 பில்லியன் டாலர் தொகைக்கு டெல் நிறுவனம் கைப்பற்றியது.
டெல்
பெராட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் டெல் நிறுவனத்தின் வன்பொருள் வர்த்தகம் மென்பொருள் துறையிலும் விரிவாக்கம் அடையத் துவங்கியது. இந்நிறுவனத்தின் வாயிலாகத் தான் டெல் கிளவுட் கம்பியூடிங், வர்த்தக மென்பொருள் மற்றும் டேட்டா மேனேஜ்மென்ட் துறையில் சிறந்து விளங்கத் துவங்கியது.
கூவஸ்ட் சாப்ட்வேர்
மேலும் டெல் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் உள்ள கூவஸ்ட் சாப்ட்வேர் நிறுவனத்தையும் விற்க ஒரு தனியார் பங்குச்சந்தை நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஈஎம்சி
டெல் நிறுவனத்தின் ஈஎம்சி நிறுவன கையகப்படுத்தும் பணி வருகிற அக்டோபர் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவன கைப்பற்றுதலில் டெல் நிறுவனத்தின் கடன் அளவு 49.5 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இதனைக் குறைக்கவே டெல் நிறுவனம் தனது பெராட் சிஸ்டம்ஸ் மற்றும் இதர மென்பொருள் சேவைகளை விற்பனை செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications