பெங்களூரு: ஐகேட் நிறுவனத்தை 4.04 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றிய கேப்ஜெமினி (capgemini), தற்போது சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவன கூட்டாளியான ஓய்னியோ நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
கேப்ஜெமினி நிறுவனத்தின் டிஜிட்டல் பரிணாம சேவையின் கீழ் வகுக்கப்பட்ட திட்டத்தில் ஓய்னியோ நிறுவனத்தைக் கொண்டு மிகப்பெரிய வர்த்தகத்தைச் செய்யக் கேப்ஜெமினி திட்டமிட்டுள்ளது.
கேப்ஜெமினி
ஐரோப்பிய சந்தையில் சேல்ஸ்ஃபோர்ஸ் சொல்யூஷன் மற்றும் பிளாட்பார்ம் சேவைகளில் முன்னணி நிறுவனமான திகழும் ஓய்னியோ நிறுவனம் கேப்ஜெமினி நிறுவனத்துடன் இணைவதால். இந்நிறுவனத்தின் சேவை இனி ஐரோப்பிய மட்டும் அல்லாது ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
டிஜிட்டல் திட்டம்
கேப்ஜெமினி நிறுவனம் டிஜிட்டல் சேவையில் மிகப்பெரிய அளவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் புதிய ஆர்டர்களைக் கைப்பற்ற தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.
ஓய்னியோ
ஐரோப்பிய சந்தையில் சேல்ஸ்ஃபோர்ஸ் கிளவுட் சேவைகள் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் சேவையில் கொடிகட்டி பறக்கும் ஓய்னியோ கைப் சையன்ஸ், உற்பத்தித் துறை, நிதியியல் துறை, உட்படப் பல துறைகளில் சுமார் 600 பிராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.
கடந்த 5 வருடத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி ஆச்சரியப்படும் வகையில் இருந்தது.
டெனீஸ் ஃபிளட்சர்
கேப்ஜெமினி நிறுவனத்துடன் இணைவது குறித்து ஓய்னியோ சீஓஓ மற்றும் சீஎஃப்ஓ மகிழ்ச்சி தெரிவித்தார். அதேபோல் இந்நிறுவன ஊழியர்கள் அனைவரும் கேப்ஜெமினி நிறுவனத்தில் இணைய உள்ளனர்.
ஐகேட்
மென்பொருள் துறையில் கேப்ஜெமினி ஐரோப்பிய சந்தையில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்தியாவை மையமாக வைத்து ஆசியாவிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வந்த நிலையில், ஐகேட் நிறுவனத்தைக் கைப்பற்றியது.
ஐகேட் நிறுவனத்தின் மூலம் கேப்ஜெமினி அமெரிக்கச் சந்தை எளிமையான வழியில் கைப்பற்றியது. இதற்கான விலை 4.04 பில்லியன் டாலர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications